இந்த டி20 உலக கோப்பை தொடர் விராட் கோலிக்கு சுமாராக அமைந்தாலும் இறுதிப் போட்டியில் மிக சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமது சேஷாத் விராட் கோலி இந்த பாகிஸ்தான் வீரரோடு ஒப்பிட வேண்டாம் என்று அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.
விராட் கோலிக்கு இந்த டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டி வரை மிகவும் சுமாராகவே அமைந்திருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இதுவரை சிறப்பாக செயல்பட்டு இருந்த முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் குறைவான ரண்களில் ஆட்டம் இழந்து வெளியேற, எப்போதும் அழுத்தமான சூழ்நிலைகளில் பிரமாதமாக விளையாடும் விராட் கோலி இந்த முறையும் தனது பழைய பேட்டிங் பார்மை மீட்டெடுத்தார்.
பொறுப்பாக விளையாடி 59 பந்துகளில் இவர் குவித்த 76 ரன்கள் இந்திய அணி 176 ரன்கள் குவிக்க உதவியது. சவாலான ஸ்கோரை இந்திய அணி நிர்ணயித்ததால் தென்னாப்பிரிக்க அணியால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் ஏழு ரன்களில் தோல்வி அடைந்து உலகக்கோப்பையையும் இழந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
தொடக்கம் முதலே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த விராட் கோலி இறுதிப்போட்டியில் அந்த அத்தனை விமர்சனங்களையும் தனது பேட்டிங்கால் அடித்து நொறுக்கினார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமுடன் ஒப்பிட வேண்டாம் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அகமது சேஷாத் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “விராட் கோலி தற்போதைய தலைமுறையின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் கிரிக்கெட் களத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு நொடியும் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுகிறார். அவர் தனது கடைசி டி20 போட்டியில் விளையாடும் போதும் கூட எதிரணியில் இருந்து ஒவ்வொரு விக்கெட் விழும் போதும் அதை உற்சாகமாக கொண்டாடினார். இந்த டி20 உலக கோப்பையில் அவரால் எதிர்பார்க்கப்பட்ட ரன்கள் குவிக்க முடியவில்லை.
இதையும் படிங்க:125 கோடியில் இவர்களுக்கும் பங்கு உண்டு.. இவ்வளவு பெரிய தொகை பரிசாக அறிவித்ததன் காரணம் இதுதான்- ஜெய்ஷா விளக்கம்
இது அனைவருக்குமே எதிர்பாராமல் நடக்கக்கூடிய நிகழ்வு தான். ஆனால் இறுதிப் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பை வென்று தர உதவினார். அவர் அப்படி விளையாடவில்லை என்றால் இந்தியா இந்நேரம் உலக கோப்பையை வென்றிருக்க முடியாது. அவர் ஒரு மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவரது இடத்தைநிரப்பப்போகும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். அவரை பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் மற்றும் எந்த வீரரோடு ஒப்பிட வேண்டாம்” என்று கூறுகிறார்.

