இந்திய கிரிக்கெட்டை அணி டி20 உலக கோப்பை வென்று தற்போது வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இந்திய அணிக்கு 125 கோடி பரிசுத்தொகையை அறிவித்தது கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தாம் அறிவித்த பரிசுத்தொகை இந்திய வீரர்களுக்கு மட்டுமல்ல என்பதையும், அவ்வளவு பெரிய தொகை அறிவித்ததற்கான காரணத்தையும் கூறி இருக்கிறார்.
2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணிதான் நிச்சயம் வெல்லும் என்று, அனைவரும் கூறிவந்த நிலையில் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் எதிர்பாராத தோல்வி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்றே கூறலாம். அது இந்திய அணியை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியது.
அதிலும் குறிப்பாக கப்டன் ரோஹித் சர்மா தான் மூன்று நாட்கள் உலகக்கோப்பை தோல்வியில் இருந்து மீண்டு வரவில்லை இன்று வெளிப்படையாக கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் அனைத்து எதிர்ப்பு குரல்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த டி20 உலக கோப்பையை இந்தியா வென்று தங்கள் எப்போதும் சாம்பியன்தான் என்று சூளுரைத்துள்ளது. அதிலும் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிப் பெற்றுள்ளது.
இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியினருக்கு யாருமே எதிர்பாராத வகையில் 125 கோடி பரிசு தொகையை அறிவித்திருக்கிறது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் 20 கோடியை விட ஐந்து மடங்கு அதிகமாகும். கிரிக்கெட் உலகை ஆச்சரியப்படுத்தி இருக்கும் இந்த நிகழ்வு குறித்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா 125 கோடி ரூபாய் இந்திய அணியினருக்கு மட்டுமல்ல பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர், அணி தேர்வுக் குழுவினர் என அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஜெய்ஷா விரிவாக கூறும் பொழுது “நாம் கடைசியாக 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றோம். அதற்குப் பிறகு 7 வருடங்கள் கழித்து மீண்டும் உலக கோப்பையை வென்று இருக்கிறோம். பிசிசிஐ நிர்வாகிகள் அனைவரிடமும் கலந்த பேசிய பின்புதான் இந்த முடிவை எடுத்தோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு நாம் ஐசிசியின் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் அணியாக இருந்தோம்.
இதையும் படிங்க:உலகக்கோப்பை வென்ற தினம்.. மார்பில் பச்சை குத்த போகும் இந்திய வீரர்.. இதுதான் காரணம்
நாம் நம்முடைய நாட்டில் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்காமல் அதை ஒரு மதமாகவே போற்றுகிறோம். நமது வீரர்கள் 20 அணிகள் கொண்ட தொடரில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர். எனவே இவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டி இருந்தது. இதனாலேயே 125 கோடி பரிசுத்தொகை அறிவித்திருக்கிறோம். இது வீரர்கள், பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்கள், தேர்வுக்குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் இது பகிர்ந்து அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

