இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை டி20 அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணமாக விளங்கிய ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல் தனது பந்துவீச்சு குறித்த சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த போதிலும், இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்திய அணியின் ரன்கள் உயர சிறப்பாக விளையாடினார்கள்.
அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா எந்த பந்துவீச்சாளரையும் பாரபட்சம் காட்டாமல் அதிரடியாக சிறப்பாக விளையாடினார். ரோகித் சர்மா 57 ரன்கள், சூரியகுமார் யாதவ் 47 ரன்கள், ஹர்திக் பாண்டியா 23 ரன்கள் ஆகியோரின் உதவியுடன் இந்திய அணி 171 ரன்களை நிர்ணயித்தது. இதற்கு பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது.
அதிலும் குறிப்பாக ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் முக்கியமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லரை வீழ்த்தி மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தார். அதற்குப் பிறகு மேலும் அவர் வீழ்த்திய இரண்டு விக்கெட்டுகள் இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போட்டி முடிந்த பிறகு இந்தியாவின் வெற்றி குறித்து பேசிய அக்சார் பட்டியல் கூறும்பொழுது “இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் அபாரமாக பேட்டிங் செய்தார்கள்.
இந்த ஆடுகளத்தில் 160 ரன்கள் குவித்தாலே போதுமானதாக இருக்கும் என்று இந்திய பேட்ஸ்மேன்கள் என்னிடம் கூறினார்கள். நான் இந்த போட்டியில் வழக்கம் போல சாதாரணமாக பந்து வீசி இருந்தால் நிச்சயம் ரன்கள் கொடுத்திருப்பேன். ஆனால் ஆடுகளத்தின் சூழ்நிலையை அறிந்து மெதுவாக வீச ஆரம்பித்தேன். அதனால்தான் எனக்கு விக்கெட்டுகளும் கிடைத்தது. தற்போதைய பங்களிப்பு எங்கள் அணிக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இதையும் படிங்க:நான் எப்போதுமே ஒரு கணக்கு வைத்திருப்பேன்.. ஆனால் அதை யாரிடமும் சொல்ல மாட்டேன்- ரோஹித் சர்மா பேட்டி
இறுதிப் போட்டியை பற்றி நாங்கள் பெரிதாக கவலைப்படவில்லை. எந்த அணிக்கு எதிராகவும் நாங்கள் ஒரே மாதிரி தான் விளையாட போகிறோம். அதனால் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் இன்றைய வெற்றியை கொண்டாடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

