நான் எப்போதுமே ஒரு கணக்கு வைத்திருப்பேன்.. ஆனால் அதை யாரிடமும் சொல்ல மாட்டேன்- ரோஹித் சர்மா பேட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை அரை இறுதி போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்து தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

இந்த வெற்றிக்கான காரணம் குறித்து இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கயானாவில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. ஏனெனில் அந்த சமயத்தில் மழை பெய்ததால் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று பட்லர் கருதி இந்த முடிவை எடுத்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்து முடித்தது. கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடிய தனது அரை சதத்தினை பதிவு செய்தார்.

- Advertisement -

39 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ரோஹித் சர்மா வெளியேறிய நிலையில், சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நன்றாக விளையாடி இந்திய அணியை சவாலான ஸ்கோரை எட்ட வைத்தனர். இதனால் இந்தியா ஏழு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. குறிப்பாக அக்சார் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நன்றாக பந்து வீசினர்.

இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறும் பொழுது ” நாங்கள் இந்த போட்டியில் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி தற்போது இறுதிப் போட்டி வரை வந்திருப்பது சிறப்பான தருணங்கள். மேலும் ஆடுகளத்தில் எவ்வளவு ரன்கள் குவித்தால் சரியான இலக்காக இருக்கும் என்று என் மனதில் எப்போதுமே ஒரு கணக்கு வைத்திருப்பேன்.

- Advertisement -

ஆனால் நான் அதை வீரர்களிடம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அவர்கள் அவர்களது உள்ளுணர்வின்படி விளையாடிக் கூடியவர்கள். இந்த ஆடுகளத்தில் 170 ரன்கள் குவித்தால் சரியான இலக்காக இருக்கும் என்று நினைத்தேன். எங்களுக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைந்தது. மேலும் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.

இதையும் படிங்க:பழிக்குப் பழி.. வரலாறு படைத்த இந்திய அணி.. இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.. 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மேலும் விராட் கோலி விஷயத்தில் அமைதியாக இருக்க வேண்டியது நல்லது என்று நினைக்கிறேன். ஏனென்றால் விராட் கோலி ஒரு கிளாஸ் பிளேயர். எல்லா வீரர்களுக்கும் இது போன்ற தருணங்கள் நிச்சயமாக இருக்கும். ஆனால் விராட் கோலி தொடக்கத்தில் இருந்து ஆக்ரோஷமாக விளையாட முயற்சிக்கிறார். அதுவே எனக்கு மகிழ்ச்சி. இதனால் அவரது விஷயத்தில் பொறுமை காக்க வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles