இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 உலக கோப்பை அரை இறுதி போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
கயானாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 57 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 47 ரன்களும், ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 23 ரன்களும் குவித்தனர். இதில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா ஜோடி 50 பந்துகளில் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டன் மூன்று ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்து அணியின் பட்லர் மற்றும் பில் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் அர்சுதீப் சிங்கின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரிகளை அடித்து இந்திய அணிக்கு பயத்தை ஏற்படுத்தினார்.
ஆனால் பவர் பிளே முடிவதற்குள்ளாகவே கேப்டன் ரோஹித் சர்மா அக்சர் பட்டேலை பந்து வீச அழைத்து வந்தார். அவரது ஓவரில் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட போய், விக்கெட் கீப்பர் பண்டிடம் ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சால்ட் பும்ராவின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேற, இங்கிலாந்து அணியின் தடுமாற்றம் அங்கிருந்து ஆரம்பித்தது.
அதற்குப் பிறகு களம் இறங்கிய மொயின் அலி பத்து பந்துகளில் 8 ரன்களில் இருந்த போது அக்சார் பட்டேலின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் அதற்குப் பிறகு களம் இறங்கிய பேர்ஸ்டோ அக்சாரின் பந்துவீச்சிலேயே வெளியேற, ஹாரி ப்ரூக் மட்டுமே ஓரளவு இங்கிலாந்து அணியை மீட்க போராடினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய சாம் கரன் 2 ரன்களிலும் லிவிங்ஸ்டன் 11 ரன்களிலும், வெளியேறினர்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 21 ரன்களில் நடையை கட்டினார். மறுமுனையில் போராடிய ப்ரூக் 25 ரன்களில் வெளியேற இங்கிலாந்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பதினாறு ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவை காப்பாற்றிய கேப்டன் துணை கேப்டன்.. வரலாறு படைக்குமா இந்திய அணி.. ரோகித் அபார ஆட்டம்
2022ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஏற்பட்ட தோல்விக்கு அதே அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை பழிக்குப் பழி தீர்த்துக் கொண்டது. நாளை இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

