இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் நிதிஷ் ரானா ரோஹித் சர்மா குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
மகேந்திர சிங் தோனியால் இவரது திறமை கண்டறியப்பட்டு, முதன்முதலாக இந்திய அணிக்குள் அறிமுகம் ஆகிறார் ரோகித் சர்மா. அவ்வப்போது வாய்ப்புகள் பெறுவதும் போவதுமாக இருந்த இவர் இவரது பவர் ஹிட்டிங் திறமையை அறிந்த தோனி மிடில் வரிசையில் இருந்து தொடக்க வரிசைக்கு மாற்றினார். அப்போது தனக்கான இடத்தை கச்சிதமாக பிடித்துக்கொண்ட ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரர் சிகார் தவானுடன் களமிறங்கி இந்திய அணிக்காக பல நல்ல இன்னிங்ஸ்களை விளையாடிக் கொடுத்ததுடன் பல வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
சமீபத்தில் சில பிரச்சனைகளின் காரணமாக விராட் கோலி கேப்டன் பதவியை விட்டு விலக, அதற்குப் பின்னர் கேப்டன் பொறுப்பை ஏற்று ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமையும் பெற்றுள்ளார். தற்போது இவரது ஒரே குறிக்கோள் தான் ஓய்வு பெறுவதற்குள் இந்த டி20 உலக கோப்பை எப்படியாவது இந்திய அணிக்கு வென்று கொடுத்து விட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக உள்ளார்.
மேலும் பேட்டிங்கிலும் அபார திறமை பெற்றிருக்கும் ரோகித் சர்மா குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் நிதிஷ் ரானா அவரது பேட்டிங் திறமை பற்றி சில கருத்துக்கள் கூறியிருக்கிறார். இது குறித்து நித்திஷ் ராணா விரிவாக கூறும்பொழுது ” ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான மிட்சல் ஜான்சன் வேகப்பந்துவீச்சை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அனல் பறக்கும் வேகத்தில் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்.
அப்படிப்பட்ட பந்துவீச்சாளரை நெட்ஸில் ரோஹித் சர்மா எதிர்கொண்ட போது ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்த்து வியந்தேன். அது அவருக்கு மிகவும் எளிதாக இருந்தது. மிகவும் திறமையாக அந்த பந்துவீச்சாளரை எதிர்கொண்டார். மீண்டும் ஜான்சனை எதிர்கொள்ளும் வாய்ப்பு எனக்கும் வந்தது. அவர் பந்து வீசும் போது சுத்தமாக எனக்கு கண்களே தெரியவில்லை. அவ்வளவு வேகத்தில் பந்து வீசினார். அப்போதுதான் நான் ரோகித் சர்மாவின் பேட்டிங் திறமையை பார்த்து வியந்தேன். அவர் ஒரு கிளாஸ் பிளேயர்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:எனக்கு பாண்டியா விளையாடறப்போ இந்த பாகிஸ்தான் வீரர்தான் ஞாபகத்துக்கு வராரு- அம்பத்தி ராயுடு பேட்டி
தொடக்கத்தில் களமிறங்கி அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வரும் ரோஹித் சர்மா, இனி வரும் போட்டியிலும் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பார் என்று தெரிகிறது. தற்போது அவரைப் பின்பற்றியே அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியான ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

