எனக்கு பாண்டியா விளையாடறப்போ இந்த பாகிஸ்தான் வீரர்தான் ஞாபகத்துக்கு வராரு- அம்பத்தி ராயுடு பேட்டி

இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை சூப்பர் 8 சுற்றில் மோத உள்ளது.

- Advertisement -

இந்த போட்டிக்காக தற்போது இரண்டு அணி வீரர்களும் மிகத் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு ஹர்திக் பாண்டியா விளையாடுவது இந்த பாகிஸ்தான் வீரரை ஞாபகப்படுத்துவது போல் உள்ளது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் பந்துவீச்சாளர் பும்ரா ஆகிய இருவரும் மிகச் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணிக்கு அசத்திக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இவரது பங்களிப்பு தற்போது இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. கடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் இவர் அடித்த 50 ரன்கள் இந்திய அணியின் ரன்களை வெகுவாகவே உயர்த்தியது. மேலும் பந்து வீச்சிலும் இக்கட்டான சூழ்நிலைகளில் இந்திய அணிக்கு விக்கெட்டுகளை எடுத்து தருகிறார்.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பாண்டியா ஏழு ரன்களுக்கு குறைவான பந்துவீச்சு எக்கானமியுடன் எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். மேலும் பேட்டிங்கிலும் 44 சராசரியுடன் 89 ரன்கள் இதுவரை குவித்துள்ளார். இந்திய அணியின் முக்கிய துருப்பு சீட்டாக விளங்கும் இவர் தனக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரரான அப்துல் ரசாக்கை நினைவு படுத்துவது போல இருக்கிறது என்று இந்திய முன்னால் வீரர் அம்பத்தி ராயுடு கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ராயுடு விரிவாக கூறும்பொழுது “ஹர்திக் பாண்டியா பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான அப்துல் ரசாக்கை எனக்கு நினைவுபடுத்துகிறார். பாண்டியா பந்து வீசும் போது எனக்கு அவர்தான் நினைவுக்கு வருகிறார். மேலும் அவரைப் போலவே அவர் எவ்வாறு அதிரடியாக விளையாடுவாரோ அதேபோன்று பாண்டியா கடைசி கட்டத்தில் இறங்கி அதிரடியாக விளையாடுகிறார்.

இதையும் படிங்க:பேட்டிங் பவுலிங் தாண்டி இந்த ஒரு விஷயமும் முக்கியம்.. இவருக்குஎன்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும்.. ரோஹித் பேட்டி

அப்துல் ரசாக் போல பந்துவீச்சு பாணியை வைத்திருக்கும் பாண்டியா வேகத்திலும் சில மாற்றங்கள் செய்து அவ்வப்போது விக்கெட்டுகள் வீழ்த்தி விடுகிறார் என்று கூறியிருக்கிறார். இன்று நடைபெற உள்ள போட்டி இந்திய அணியை விட ஆஸ்திரேலியா அணிக்கு மிக முக்கிய போட்டியாக இருப்பதால், இந்தப் போட்டி ரசிகர்களுக்கு அனல் பறப்பது உறுதி. ஏறக்குறைய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் முழுவதுமாக அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என்பதால் இந்திய அணியும் அதற்கு ஈடான சவாலை அளிக்கும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles