2023 உலக கோப்பையை ஞாபகப்படுத்திய மேக்ஸ்வெல்.. குல்புதீன் அபார பந்துவீச்சு.. ஆஸியை வீழ்த்தி வரலாறு படைத்த ஆப்கன்

ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

இப்போட்டியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு அரை இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

கிங்ஸ்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் மிகச் சிறப்பாக அமைந்த போதிலும், பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறியதால் 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 49 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 60 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

அவருடன் பாட்னர்ஷிப் அமைத்த இப்ராஹிம் ஜர்தான் 48 பந்துகளில் ஆறு பௌண்டரிகளுடன் 51 ரன்கள் குவித்தார். அதற்கு பின்னால் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளரான கம்மின்ஸ் இந்த முறையும் தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றினார். கம்மின்ஸ் நான்கு ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையைப் பார்க்கும் போது இந்த போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற்று விடும் என்று அனைவரும் கருதினர். ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ஹெட்டின் விக்கெட்டை நவீன் உல்ஹக் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் விக்கெட் வீழ்ச்சியினை ஆரம்பித்து வைத்தார். அதற்குப் பின்னர் வார்னரின் விக்கெட்டை நபி வீழ்த்த, மிச்சல் மார்ஸ் 12 ரன்கள் திரும்பவும் நவீனின் பந்து வீச்சில் வெளியேறினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு மேக்ஸ்வெல் மட்டும் ஒரு முனையில் விளையாடிக் கொண்டிருக்க, மறுமுனையில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் சீரான வரிசையில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மேக்ஸ்வெல் ஒரு ஆளாக நின்று விளையாட திரும்பவும் 2023 உலக கோப்பையில் தனி ஆளாக நின்று வெற்றி பெற வைத்தது போல் இன்றும் செய்து விடுவாரோ என்ற அச்சம் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மனதில் இருந்தது.

இதையும் படிங்க:எனக்கு காயம் ஏற்பட்டபோது டிராவிட் சார் சொன்னது நினைவுக்கு வந்தது.. அதனால்தான் நான் இன்னும் கடினமாக உழைக்கிறேன்.. பாண்டியா பேட்டி

ஆனால் அவரை குல்புதின் பந்துவீச்சில் பாய்ண்ட் திசையில் நின்று கொண்டிருந்த நூர் அகமது அபாரமாக கேட்ச் பிடிக்க, 41 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 59 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, அதோடு ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையும் தகர்த்தது. இறுதியாக ஆஸ்திரேலியா அணி 19 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய குல்புதின் நான்கு ஓவர்களில் இருபது ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். முன்னாள் சேம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது கற்றுக் குட்டியான ஆப்கானிஸ்தான் அணி.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles