எனக்கு காயம் ஏற்பட்டபோது டிராவிட் சார் சொன்னது நினைவுக்கு வந்தது.. அதனால்தான் நான் இன்னும் கடினமாக உழைக்கிறேன்.. பாண்டியா பேட்டி

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்தியாவின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு இந்த போட்டியில் மிக முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து ஹர்திக் பாண்டியா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்றாலும் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. தொடக்கம் முதலே இந்திய பேட்ஸ்மேன்கள் 140 முதல் 150 ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பன்ட், சிவம் துபே ஆகியோறது பேட்டிங் முக்கிய பங்கு வைத்தது.

- Advertisement -

மேலும் ஹர்திக் பாண்டியா தொடக்கம் முதலே தனது அதிரடியை குறைக்காமல் சிறப்பாக விளையாடினார் 185 ஸ்ட்ரைக் ரேட்டில் 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் மற்றும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இதனால் இந்தியா சவாலான ஸ்கோரை நிர்ணயித்தது. இந்திய அணி நிர்ணயித்த 196 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்தப் போட்டிக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா போட்டி குறித்து பேசும் போது “இந்த போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடினோம். மேலும் எங்கள் திட்டங்களில் கவனமாகவும், அதை தெளிவாகவும் செயல்படுத்தினோம். பேட்ஸ்மேன்கள் காற்றில் போகும் பந்தை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதால் அதற்கு எதிர் திசையில் பந்து வீச வேண்டும் என்று முயற்சி செய்தேன்.

- Advertisement -

இது பேட்ஸ்மேனை விட ஒரு படி மேலே சிந்தித்தால் தான் நன்றாக செயல்பட முடியும். ஒரு குழுவாக நாம் எங்கு வேண்டுமானாலும் சிறப்பாக செயல்பட வேண்டும். எங்களிடம் இருக்கும் ஒரே ஒரு குறை என்னவென்றால் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறி கொடுப்பது ஆகும். அதை மட்டும் நாங்கள் விரைவில் சரி செய்தாக வேண்டும். மற்றபடி நாங்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதையும் படிங்க:பேட்டிங் பவுலிங் தாண்டி இந்த ஒரு விஷயமும் முக்கியம்.. இவருக்குஎன்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும்.. ரோஹித் பேட்டி

எனக்கு முன்பு ஒரு வித்தியாசமான ஒரு காயம் ஏற்பட்டது. அந்த காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு நான் கடினமாக உழைத்தேன். அப்போது எங்கள் அணியின் பயிற்சியாளர் ஆன டிராவிட் சார் யார் கடினமாக உழைக்கிறார்களோ அவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என்று கூறினார். இதனாலேயே நான் கடினமாக உழைக்க ஆரம்பிக்கிறேன்” என்று ஹர்த்திக் பாண்டியா கூறி இருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles