பேட்டிங் பவுலிங் தாண்டி இந்த ஒரு விஷயமும் முக்கியம்.. இவருக்குஎன்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும்.. ரோஹித் பேட்டி

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இந்திய அணியின் வெற்றி குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆன்ட்டிகுவா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 23 ரன்களும், விராட் கோலி 37 ரன்கள், ரிஷப் பந்த் 36 ரன்களும் குவித்தனர். சூரியகுமார் யாதவ் 6 ரன்களில் வெளியேறினாலும், அதற்கு பின்னர் களமிறங்கிய சிவம் துபே 34 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதற்குப் பின்னர் களமிறங்கிய துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்தார். 27 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் என்று 50 ரன்கள் விளாசினார். இவரின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

இதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி இந்திய அணி பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சினால் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெற்றிக்கான காரணங்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது “இந்த போட்டியில் எங்களது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டுமே அற்புதமாக இருந்தது. எங்களிடம் என்ன எதிர்பார்த்தார்களோ நாங்கள் அதை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொண்டிருக்கிறோம். இங்கு அணியின் வெற்றி என்பதை தாண்டி வீசக்கூடிய காற்றும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய மிகவும் அவசியம்.

இதையும் படிங்க:அடேங்கப்பா.. தனி ஆளாக மாஸ் காட்டிய ஹர்திக் பாண்டியா.. இந்திய கிரிக்கெட்டில் 2 மெகா சாதனைகள்

இரண்டு துறைகளிலும் நாங்கள் அற்புதமாக செயல்பட்டோம். நாங்கள் இந்த போட்டியில் 196 ரன்கள் குவித்தோம். ஆனால் எங்கள் அணியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களே 50 ரன்கள்தான். இந்த போட்டியில் சதம் மற்றும் அரை சதங்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கக்கூடிய அழுத்தமே முக்கியம். ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் மிக அற்புதமாக செயல்பட்டார். அவரால் என்ன முடியும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அவர் இப்படியே இந்தத் தொடர் முழுவதும் நன்றாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம். பாண்டியா இரண்டு துறைகளிலுமே முக்கிய வீரராக இருக்கிறார்” என்று ரோகித் சர்மா கூறி இருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles