ஒன்பதாவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் எதிர்கொண்டு விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய ஹார்த்திக் பாண்டியா அரை சதம் அடித்ததுடன் மேலும் இரண்டு முக்கிய சாதனைகளையும் படைத்திருக்கிறார். இந்திய அணி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் ஆன்டிகுவாவில் விவியன் ரிச்சர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய ரிஷப் பண்ட் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினார். 24 பந்துகளில் நான்கு பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் என 36 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடிய நிலையில், ரிவர்ஸ் ஸ்வீப் தேவையில்லாமல் அடித்து தனது விக்கெட்டை தாரை வார்த்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு விளாசி அடுத்த பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய சிவம்துபே தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும், அதற்கு பின்னர் களம் இறங்கி 24 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 34 ரன்கள் குவித்து வெளியேறினார். அதற்குப் பின்னர் களத்திற்குள் உள்ளே வந்த ஹர்திக் பாண்டியா ஆடுகளத்தின் சூழ்நிலையை நன்கு கணித்து நிதானமாகவும் அதே நேரத்தில் நல்ல பந்துகளை தண்டிக்கவும் விடவில்லை.
27 பந்துகளை எதிர் கொண்ட பாண்டியா நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 50 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. இந்த அரை சதத்தின் மூலம் பாண்டியா டி20 உலக கோப்பையில் மொத்தமாக 300 ரன்கள் கடந்தார். மேலும் டி20 உலக கோப்பையில் 300 ரன்கள் அதுமட்டுமில்லாமல் இருபது விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க:6 முறை.. 4 ரன்களுக்கும் கீழ்.. பும்ரா படைத்த தனி சாதனை.. 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஆறாவது இடத்தில் பேட்டிங் களம் இறங்கி அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இதற்குப் பின்னர் களமிறங்கி வங்கதேச அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

