ஒரே ஓவரில் 22 ரன்கள்.. எல்லாம் முடிந்தது என்று நினைத்தேன்.. ஆனால் தோனியின் செயல் என்னை நெகிழ வைத்தது.. கூறுகிறார் அஸ்வின்

தற்போது இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியால் முழுமையாக வாய்ப்பு பெற்று இந்திய அணியில் நுழைந்தார்.

- Advertisement -

அதற்குப் பிறகு அவர் செய்த சாதனைகள் ஏராளம். இருப்பினும் தொடக்க காலத்தில் மகேந்திர சிங் தோனி குறித்து அஸ்வின் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக விளங்கியவர் மகேந்திர சிங் தோனி. இவர் கிரிக்கெட்டுக்காக செய்த சாதனைகளை விட பெற்றுக் கொடுத்த கோப்பைகள் ஏராளம் என்று கூறலாம். 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையும் மகேந்திர சிங் தோனிக்கு உள்ளது.

- Advertisement -

இது தவிர ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு, இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த பெருமையும் தோனியையே சாரும். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல்-லை போன்று மற்ற நாடுகளில் கிளப் கிரிக்கெட் தொடர்களில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பொதுவாக சாம்பியன்ஸ் லீக் என்ற ஒரு தொடர் நடத்தப்படும்.

அனைத்து நாட்டு கிளப் அணிகளும் அதில் கலந்து கொண்டு திறமையாக விளையாடுகிற அணி சேம்பியன் பட்டத்தை வெல்லும். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தி இருக்கிறது. 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சென்னை அணி இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றுள்ளது. அந்தத் தொடரில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு போட்டியில் சூப்பர் ஓவரில் நடைபெற்ற சம்பவம் குறித்து சில சுவாரசியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அஸ்வின் விரிவாக கூறும்பொழுது “நாங்கள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஒரு போட்டியில் விக்டோரியா புஷ் ரேஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினோம். அப்போது போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் நான் பந்து வீசிக்கிறேன் என்று தோனியிடம் கேட்டு வாங்கினேன். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த ஓவரில் 22 ரன்களை விட்டுக் கொடுத்தேன் என்னால் அப்போட்டி தோற்றது. அதற்குப் பிறகு அடுத்து வரும் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காது, இனி எல்லாம் முடிந்தது என்று நினைத்தேன்.

இதையும் படிங்க:எங்கள் கோச் இவருக்கு மட்டும் எதையும் சொல்லித் தர மாட்டார்- இந்திய வீரர் அக்சார் பட்டேல் பேட்டி

ஆனால் மகேந்திர சிங் தோனி உங்கள் பந்துவீச்சில் நிறைய வேரியேஷன்கள் இருக்கிறது, அதை தொடர்ந்து செயல்படுத்துங்கள் என்று என்னை ஆதரித்தார். அவரது வார்த்தைகள் என்னை நெகிழ வைத்தது. மேலும் அடுத்த போட்டியில் வாய்ப்பும் கொடுத்தார் அந்த போட்டியின் 17வது ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினேன். மேலும் அந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles