இந்திய அணிக்கு இந்த வீரர் கடவுள் தந்த பரிசு.. கூறுகிறார் இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு

இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சூப்பர் 8 சுற்றில் நடத்த போட்டியில் இந்திய அணி நாளை வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு சூரியகுமார் யாதவின் பேட்டிங்கை பாராட்டியும், மேலும் இந்த வீரர் இந்திய அணிக்கு கடவுள் கொடுத்த வரம் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பையை வென்று விட வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய அணி வீரர்கள் தற்போது மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதுவரை நடந்த நான்கு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று தற்போது நாளை வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது. இந்திய அணியின் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அணியை விமர்சித்தவர்களே தற்போது பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

அந்த அளவிற்கு இந்திய அணியின் செயல்பாடு திருப்திகரமாக இந்த டி20 உலக கோப்பையில் இருந்து வருகிறது. இருப்பினும் தற்போது வரை பாகிஸ்தான் அணியைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் சிறிய அணிகள் என்பதால் இந்திய அணிக்கு ரியலான போட்டிகளே இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறது. வங்கதேச அணியை தவிர அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டி, அரையிறுதி போட்டிகள் என இந்திய அணிக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் சூர்யா குமார் யாதவ் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார் என்றும், பந்துவீச்சாளர் பும்ராவின் செயல்பாடு குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பாதி ராயுடு சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார். இது குறித்து அம்பாதி ராயுடு கூறும் பொழுது “சூரியகுமார் யாதவ் முற்றிலும் கைதேர்ந்த வீரராக இருக்கிறார். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும், கிரிக்கெட் போட்டி விளையாடுகிற ஒவ்வொரு வீரருக்கும் மெதுவான ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் கிரீஸ் மற்றும் தனது கால்களை பயன்படுத்தி அற்புதமாக விளையாடுகிறார். அவரது கால்களை கவனியுங்கள், இரண்டு மீட்டருக்கு முன்பாகவே பந்தை கணித்து விளையாடுகிறார். அவர் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அற்புதமான கோணத்தில் பந்தை ஹிட் செய்கிறார். அதனால்தான் சூரிய குமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க:இந்தியாவுல 2 விராட் கோலி இருக்காங்க.. எல்லா பிட்ச்லயும் இவர் அசத்துறாரு.. கூறுகிறார் சோயப் மாலிக்

அதற்கு அப்படியே பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் பும்ரா செயல்படும் விதம் அற்புதமாக இருந்து வருகிறது. அவர் எந்த ஒரு கடினமான சூழ்நிலைகளிலும், அதை தனக்கு சாதகமாக மாற்றி பயன்படுத்திக் கொள்கிறார்.இவர் இந்திய அணிக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கடவுள் தந்த பரிசு” என்று அம்பாதி ராயுடு குறிப்பிட்டிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles