இவரை கவனமா பயன்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.. எதையும் செய்ய தயாராக உள்ளார்.. ரோஹித் சர்மா பேட்டி

நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை ஓரளவு சமாளித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. 90 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகள் இழந்தாலும், இக்கட்டான சூழ்நிலையில் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா கூட்டணி பொறுப்பாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. இதில் மிகவும் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரை சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

மற்றொரு முனையில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியா 181 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கத்தில் பும்ராவின் அதி அற்புதமான பந்துவீச்சு, மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களின் உதவியுடன் 134 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார். இது குறித்து ரோகித் சர்மா கூறும் பொழுது ” வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே நாங்கள் இங்கு வந்து விளையாடி இருக்கிறோம். போதிய கால நேரம் இல்லாததால் எங்களால் மைதானத்திற்கு தகுந்தவாறு முடிந்தவரை மாற்றிக் கொண்டோம்.

- Advertisement -

நாங்கள் அடித்த ரன்களை எங்களது பந்துவீச்சு யூனிட் காப்பாற்றும் என்று நம்பினேன். அனைவரும் தங்களது வேலையை சிறப்பாக செய்து வருகிறார்கள் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா கூட்டணி கடைசியில் மிகச் சிறப்பாக இருந்தது. பும்ரா எங்களுக்காக என்ன செய்ய முடியும் என்பதை நாம் முன்னரே அறிந்த ஒன்றுதான். அவரைப் பொறுப்பாக பயன்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

இதையும் படிங்க:4-1-7-3.. பந்துவீச்சில் மாஸ் காட்டிய பும்ரா.. 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.. பரிதாபமான ஆப்கானிஸ்தான்

அவரிடம் எந்த நேரத்தில் பந்தை கொடுத்தாலும், இந்திய அணிக்காக எதையும் செய்ய பும்ரா தயாராக இருக்கிறார். ஒரு அணியின் கேப்டனாக சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை நான் முன்னரே கணிக்க வேண்டும். எதிரணி எந்த சூழ்நிலையில் இருக்கிறது என்பதை பார்த்து அணியை அவ்வப்போது மாற்றுவோம். இன்று தேவைப்பட்டதால் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் சென்றேன். அதுவே சூழ்நிலை வேறாக இருந்திருந்தால் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் செல்வதற்கும் நான் தயங்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles