4-1-7-3.. பந்துவீச்சில் மாஸ் காட்டிய பும்ரா.. 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.. பரிதாபமான ஆப்கானிஸ்தான்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

- Advertisement -

பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை ரன்கள் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினர்.

- Advertisement -

பார்படாசில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் வழக்கம் போல் விரைவிலேயே விக்கெட் கொடுத்து வெளியேறினாலும், மிடில் ஆர்டரில் களம் இறங்கி விளையாடிய சூரியகுமார் யாதவ் கடந்த முறை போல இந்த முறையும் அபாரமாக விளையாடி 28 பந்துகளில் 5 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 53 ரன்கள் குவித்தார். இவருக்கு பக்கபலமாக நின்ற துணை கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 24 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் 140 ரன்கள் வருமா? என்ற இக்கட்டான சூழ்நிலையில் சூரிய குமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் சிறப்பான பேட்டிங் பங்களிப்பால் இந்திய அணி 180 ரன்கள் கடந்தது. பந்து வீச்சில் ரசீத் கான் சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கி விளையாடியது.

பும்ரா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் ஆட்டம் இழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹஸ்ரத்துல்லா அவரும் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் வரிசையாக தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குல்புதீன் 17 ரன்களும், அஹ்மத்துல்லா 26 ரன்களும் குவித்தனர். அதற்குப் பின்னர் களமிறங்கிய நஜீபுல்லா 19 ரன்கள் குவிக்க, பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொற்பரன்களிலேயே ஆட்டம் இழந்து வெளியேறினர்.

- Advertisement -

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே குவித்தது. பந்துவீச்சில் அபாரமாக பந்து வீசிய பும்ரா நான்கு ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனுடன் ஏழு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அடுத்ததாக ஹர்ஸ்தீப் சிங் 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையும் படிங்க:என்கிட்டயா சவால் விடுற.. உன்ன மாதிரி நான் எத்தனை பேரை பார்த்தவன்.. குர்பாசை தூக்கிய பும்ரா

சுழற் பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளும், ஆல் ரவுண்டர்களான அக்சார் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒரு விக்கட்டும் கைப்பற்றினார்கள். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 47 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்த சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி தனது அடுத்த போட்டியை வங்கதேச அணியோடு மோதுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles