கிளாஸ் ஆட்டம் ஆடிய சூரியகுமார் யாதவ்.. மீண்டும் ஏமாற்றிய ரோஹித் கோலி கூட்டணி.. ரஷீத் கான் சிறப்பான பந்து வீச்சு

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் குவித்திருக்கிறது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிற இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். இப்போட்டியில் ஆடுகளம் தொடக்கத்தில் மெதுவாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 13 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் எட்டு ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரூக்கியின் பந்துவீச்சில் வெளியேறினார். இடது கை பந்துவீச்சாளருக்கு எதிராக அவரது தடுமாற்றம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி 24 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் ஒரு சிக்ஸர் உடன் வெளியேறினார்.

அதற்குப் பிறகு களமிறங்கிய பண்ட் 11 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் குவித்த நிலையில் 20 ரன்கள் உடன் ரசித் கானின் பந்துவீச்சில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் தூபே பத்து ரன்களில் வெளியேற, இந்திய அணி 11ஓவர்களில் 90 ரன்கள் குவித்து நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி சர்விலிருந்த இந்திய அணியை வெகுவாக மீட்டெடுத்தது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சூரியக்குமார் யாதவ் விளையாடிய ஷாட்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. ஆடுகளம் மெதுவாக காணப்பட்ட போதிலும், அவரது பேட்டிங் உண்மையிலேயே பிரம்மிக்க வைத்தது. 28 பந்துகளை சந்தித்து சூரியகுமார் யாதவ் ஐந்து பௌண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 189 ஸ்ட்ரைக் ரேட்டில் 53 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 32 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க:ஐபிஎல்லால் கிரிக்கெட் வியாபாரமாக மாறிவிட்டது.. யாரும் நாட்டுக்காக விளையாடுவதை விரும்புவதில்லை.. அப்ரிடி வருத்தம்

பந்துவீச்சை பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் அணியில் ரசித் கான் மற்றும் பரூக்கி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள். குறிப்பாக இந்திய அணியின் பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆப்கானிஸ்தான் அணி அடுத்த இன்னிங்சில் விளையாடி வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles