டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அடுத்த குற்ற எட்டி இருக்கும் நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியாக சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.
அமெரிக்க ஆடுகளத்திற்கு தகுந்தவாறு இந்திய அணியை தேர்வு செய்த ரோகித் சர்மா தற்போது வெஸ்ட் இண்டீஸ் மைதானத்திற்கு ஏற்ற இரண்டு மாற்றங்களை செய்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஆடுகளங்கள் முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய அணி மூன்று பிரதான தேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு வெற்றி பெற்றது. குல்திப் யாதவ் மற்றும் சஹால் போன்ற சுழற் பந்துவீச்சாளர்கள் உட்கார வைக்கப்பட்டனர். மேலும் ஹர்டிக் பாண்டியா நான்காவது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்தப்பட்டிருந்தார். மேலும் தேவைப்படும் நேரத்தில் இந்திய அணியின் மற்றொரு ஆல்ரவுண்டரான சிவம் தூபேவும் தேவைக்கு ஏற்றவாறு ஓவர்களை வீசினார்.
இந்த சூழ்நிலையில் சூப்பர் 8 போட்டிகள் முதல் இறுதிப்போட்டி வரை வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற உள்ளதால் இதற்கு தகுந்த இந்திய அணியை ரோகித் சர்மா நிச்சயம் தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கலாம். இதன் முதல் மாற்றமாக வேகப்பந்துவீச்சாளர் ஆன முகமது சிராஜுக்கு பதிலாக பிரதான சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை உள்ளே கொண்டு வர வாய்ப்புண்டு.
ஏனென்றால் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில், சுழல் ஆல் ரவுண்டர்களை வைத்து ஓவர்களை வீசுவது கடினம். இதனால் ரோஹித் சர்மா நிச்சயமாக இந்த மாற்றத்தினை மேற்கொள்வார். மேலும் இரண்டாவதாக பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டிருக்கும் சிவம் துபேவிற்கு பதிலாக சஞ்சு சாம்சனை களம் இறக்கலாம். பயிற்சி போட்டியில் வாய்ப்பு பெற்ற சஞ்சீவ் சாம்சன் அதற்குப் பிறகு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் அடுத்த போட்டியில் பேட்டிங் ஆர்டரை நீளப்படுத்த ரோஹித் சர்மா இந்த முடிவை மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கலாம். முக்கியமாக வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களுக்காகவே இந்திய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்தது. இதனால் இனி வருகிற போட்டிகளில் சுழற் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் முதல் போட்டி நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணியிலும் உலகத்தரம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நான் முன்ன மாதிரி இல்ல.. நம்புங்க நிறைய மாறிட்டேன்.. சூரியகுமார் யாதவ் பேட்டி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ள இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் :
ரோஹித் சர்மா( கேப்டன்),விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்திப் யாதவ், அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.

