தோனிக்கு இந்தியாவில் எல்லாமே சொந்த மைதானம்தான்.. அவர் உள்ளே நுழையும் போது காதுகள் இருக்காது.. ராணா பேட்டி

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய இளம் 22 வயதான ஹர்ஷித்ராணா கொல்கத்தா அணிக்காக இந்த ஆண்டு மிகச்சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் தனது ஐபிஎல் அனுபவம் குறித்தும், மகேந்திர சிங் தோனி குறித்தும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது பண்ணை வீட்டில் செல்லப் பிராணிகளுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அந்தப் புகைப்படங்கள் அவர் பிட்டாக இருப்பதை உணர்த்துவது போல் இருந்தது.

- Advertisement -

அடுத்து நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி மீண்டும் ஒருமுறை சென்னை அணிக்காக களமிறங்கி விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மீண்டும் ஒருமுறை விளையாடுவேன் என்று இறுதிப் போட்டியிலேயே கூறிய தோனி இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

மேலும் அடுத்த ஆண்டு மெகா ஆக்சன் நடைபெற உள்ளதால் தோனி திரும்பவும் சென்னை அணிக்காக விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குறித்து சென்னை நிர்வாகி சிஇஓ தெரிவிக்கும்போது “இது அனைத்துமே தோனியின் கைகளில் தான் இருக்கிறது அவர் விளையாட விரும்பினால் அவரை நிச்சயமாக ஏலத்தில் எடுத்து விடுவோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணி வீரர் ஹர்ஷித் ராணா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் மகேந்திர சிங் தோனி குறித்து சில சுவாரசியமான கருத்துக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து ராணா கூறும் பொழுது ” மகேந்திர சிங் தோனிக்கு செல்லும் இடமெல்லாம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அவர் சென்று விளையாடும் ஒவ்வொரு மைதானமும் அவர்கள் சொந்த மைதானம் தான். அந்த அளவிற்கு ரசிகர்கள் வரவேற்பு மிகவும் அபாரமாக உள்ளது.

இதையும் படிங்க:டெத் ஓவர்களில் கூட வெஸ்ட் இண்டிஸ் மைதானங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும்.. ஜடேஜா, குல்தீப் யாதவ் பேட்டி

அவர் செல்லும் இடங்கள் எல்லாம் மைதானம் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும். அவர் மைதானத்திற்குள் உள்ளே நுழையும்போது உங்கள் காதுகள் உங்களிடம் இருக்காது. அந்த அளவுக்கு ரசிகர்களின் சத்தம் ஆரவாரத்தை எழுப்பும். அவர் நுழையும் போது உங்கள் காதுகள் வெடிப்பது போன்று உணர்வீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles