டெத் ஓவர்களில் கூட வெஸ்ட் இண்டிஸ் மைதானங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும்.. ஜடேஜா, குல்தீப் யாதவ் பேட்டி

ஒன்பதாவது டி20 கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்து தற்போது சூப்பர் 8 போட்டிகளில் விளையாட அணிகள் ஆயத்தமாகி வருகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அமெரிக்காவில் லீக் போட்டிகளை விளையாடியது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகள் விளையாடிய நியூயார்க் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் இந்திய அணி மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டும், இரு சுழற் பந்து ஆல்ரவுண்டர்களைக் கொண்டும் களமிறங்கி வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆனால் அடுத்த சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டிஸ் மைதானங்களில் நடைபெறுவதால், இங்குள்ள மைதான சூழல் அமெரிக்காவின் மைதானங்களுக்கு அப்படியே நேர்மாறாக இருக்கும். இங்கு சுழற் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதால் அங்குள்ள மைதான சூழல் குறித்து குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சில கருத்துக்களை கூறியிருக்கின்றனர்.

இதுகுறித்து ஜடேஜா கூறும்பொழுது
“பொதுவாக வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நாங்கள் விளையாடும் போது ஆடுகளம் வறண்டும், மெதுவாகவும் காணப்படும். மேலும் இங்கு போட்டிகள் நாங்கள் காலையில் விளையாடுகின்ற காரணத்தால் ஸ்பின்னர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். மேலும் இந்தியாவிலும் இதுபோன்ற ஆடுகளங்கள் நிறைய உள்ளன. இங்குள்ள மைதானத்தின் சூழலால் இறுதிக்கட்ட ஓவர்கள் கூட ஸ்பின்னர் வீசுவதற்கு வாய்ப்பு உண்டு. அதையும் நீங்கள் காண முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் கூறும் பொழுது
” வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் சுழற் பந்துவீச்சார்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய நிர்வாகம் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. இங்கு பங்குவீச்சாளர்களுக்கு லென்த் என்பது மிக முக்கியமாக காணப்படுகிறது. நான் ஏற்கனவே வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணத்தில் விளையாடி இருக்கிறேன். இங்கு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும்.

இதையும் படிங்க:விராட் கோலி ஃபார்ம் அவுட்டில் இருப்பது நல்லது தான்.. காரணம் கூறுகிறார் இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர்

எனவே இனி வரும் போட்டிகளில் எனக்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று கூறுகிறார். அமெரிக்கா வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலேயே சுழற் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இனி அடுத்து வரும் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற உள்ளதால் இங்கு சுழற்பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும். இதனால் இந்திய அணி வரும் போட்டிகளில் ஸ்பின்னர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles