இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் ரோகித் சர்மா. சமீபத்தில் டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக போட்டிகள் வெற்றி பெற்று மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்தார்.
கிரிக்கெட்டின் ஆரம்ப புதிதில் ரோஹித் சர்மா தொப்பையோடு இருந்ததாகவும் அதற்குப் பிறகு அவர் ஹிட்மேன் ஆனதை அவரது நண்பரான அபிஷேக் ஷர்மா விளக்கி இருக்கிறார்.
2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அறிமுகமானார். மும்பையைச் சேர்ந்த ரோகித் சர்மா அப்போது இந்திய அணியில் அறிமுகமாகி மிடில் ஆர்டரில் விளையாடிக் கொண்டிருந்தார். இவரது திறமையை அப்போதே கண்டெடுத்த மகேந்திர சிங் தோனி அவரை மிடில் ஆர்டரில் இருந்து தொடக்க ஆட்டக்காரராக மாற்றினார். அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு ரோகித் சர்மா ஒரு நாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தனி நபர் அதிகபட்ச ரன்களையும் குதித்திருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்து சிறந்த கேப்டனாகவும் தன்னை நிரூபித்து இருக்கிறார். இதனால் இந்திய அணி நிர்வாகம் விராட் கோலிக்கு அடுத்ததாக ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓர் உலகக் கோப்பையை ரோகித் சர்மா வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக வெல்ல முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது நடைபெறுகிற டி20 உலக கோப்பையை வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணி வீரர்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா ரோஹித் சர்மாவின் ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அபிஷேக் நாயர் விரிவாக கூறும்பொழுது
” 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தேர்வில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. ரோகித் சர்மா அப்போது அதிக எடையோடு காணப்பட்டார். இதனால் அவரை உடல் எடையை குறைக்கும் படி அவரிடம் கூறினேன். உலகக் கோப்பையில் இடம் பெறாததை உணர்ந்த ரோகித் சர்மா அந்த இடத்திலிருந்து தனது பேட்டிங்கிலும் உடல் எடையிலும் மாற்றங்களை கொண்டு வந்தார்.
இதையும் படிங்க:பார்ம் அவுட்ல இருந்தாலும் பரவால.. அவர உள்ள கொண்டு வராதீங்க எல்லாமே பிரச்சினையாயிரும்.. வாசிம் ஜாஃபர் பேட்டி
அந்த மாற்றம் தான் அவரை ஹிட்மேன் ஆக உருவாக்கியது. எனது பயணத்தில் அவர்தான் வெற்றிகரமாக மாறிய முதல் கிரிக்கெட் வீரர் ஆவார். அவரைப் பற்றி பலரும் 2 நிமிட மேகி மேன் என்று கூறுவார்கள். அவை அனைத்தையும் ரோகித் சர்மா மாற்றினார்” என்று கூறியிருக்கிறார்.

