தோனி மட்டும் இல்லையென்றால் சச்சின் வருத்தத்துடன் விடை பெற்று இருப்பார்.. கனடா வீரர் ஜான்சன் பேட்டி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. கனடா அணிக்கு எதிரான லீக் சுற்றின் கடைசி போட்டியில் மழை பெய்த காரணத்தினால் அந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் நிறுத்தப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக கனடா அணி வீரர்கள் இந்திய அணி குறித்தும், மகேந்திர சிங் தோனி குறித்தும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இந்த டி20 உலக கோப்பை தொடரை சிறப்பாக தொடங்கி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் வரிசையாக அயர்லாந்து, பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகளை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

கனடா அணிக்கு எதிரான நான்காவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழையால் ஆட்டம் எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டது. இதனால் கனடா மற்றும் இந்திய அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில் இந்திய அணி வருகிற 20 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அடுத்த சுற்றில் மோத உள்ளது.

இந்த நிலையில் கனடா அணி வீரர்கள் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி குறித்தும் தோனி குறித்தும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கின்றனர். இது பற்றிய கனடா வீரர் ஜான்சன் கூறும் பொழுது
“இந்தியா பல உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை கொண்டிருக்கிறது. அதில் மகேந்திர சிங் தோனி மிகவும் மகத்தான வீரர். சச்சின் டெண்டுல்கர் மிகவும் மகத்தான பேட்ஸ்மேன்.

- Advertisement -

ஆனால் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இல்லாமல் இருந்திருந்தால் சச்சின் டெண்டுல்கர் வருத்தத்துடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று இருப்பார். தோனி கேப்டனாக இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியதால்தான் 24 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி உலக கோப்பையை வென்று சச்சின் டெண்டுல்கர் மிகவும் சந்தோஷத்துடன் விடை பெற்றார். இந்த கால கிரிக்கெட்டை பொருத்தவரையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தனக்கு மிகவும் பிடித்த வீரர்கள்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:ரோஹித் சர்மாவின் வெற்றி ரகசியம் இது தான்.. இளைஞர்கள் அவரைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.. கூறுகிறார் சஞ்சு சாம்சன்

சச்சின் டெண்டுல்கர் அசாருதீன், டிராவிட் மற்றும் கங்குலி என்று பல கேப்டன்களின் கீழ் விளையாடி இருந்தாலும் மகேந்திர சிங் தோனியின் தலைமையிலேயே 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி, அதற்குப் பிறகு டி20 உலக கோப்பையை வெல்லாமல் தவித்து வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles