சச்சின், டிராவிட்டுக்குத் தெரிந்த மரியாதை இவருக்கு தெரியாது.. ஏன் இப்படி பேசுகிறார் என்று புரியவில்லை.. இம்ருல் கேயஸ் விமர்சனம்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், வங்கதேச அணி வீரர் ஷகிப் அல்ஹசன் குறித்து வீரேந்திர சேவாக் பேசியது தற்போது சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இது தற்போது பெரிய அளவில் விவாதமாகிக் கொண்டிருக்கும் நிலையில், வங்கதேச அணி வீரர் இம்ரூல் கேயஸ் இது குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

- Advertisement -

வங்கதேச அணிக்காக நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடும் வீரரான ஷகிப் அல்ஹசன் தற்போது டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடிக் கொண்டிருக்கிறார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஷகீப் அல்ஹாசன் ஃபுல் ஷாட் அடிக்க முயற்சி செய்து நோக்கியா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் வங்கதேச அணியின் கையில் இருந்த போட்டி தென்னாப்பிரிக்காவின் கைகளில் சென்று வெற்றி பெற்றது.

- Advertisement -

தற்போது வங்கதேச அணி அடுத்து சுற்றுக்கு முன்னேற பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் “அனுபவத்திற்காக வங்கதேச அணி ஷகிப் அல்ஹஹசனை எடுத்துள்ளது. ஆனால் அப்படிப்பட்ட அனுபவத்தை அவரிடம் இருந்து பார்க்க முடியவில்லை. ஃபுல் ஷாட் அடிப்பதற்கு அவர் கில்கிரிஸ்டோ அல்லது ஹைடன் கிடையாது. அவருக்குத் தெரிந்த ஷாட்டை அவர் விளையாடி இருக்க வேண்டும்” என்று விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதில் தெரிவித்த ஷகீப் அல் ஹசன் “இதற்கெல்லாம் பதில் கூற முடியாது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாடுவதே ஒரு வீரனின் வேலை. இன்று என்னுடைய நாள் இல்லாமல் இருந்திருக்கலாம்” என்று கூறி முடித்துக் கொண்டார். இது குறித்து மற்றொரு வங்கதேச அணி வீரரான இம்ரோல் கேயஸ் கூறும் பொழுது
“ஷகீப் ஒரு நாளில் இந்த இடத்திற்கு வரவில்லை. அவர் இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் அவர் முதல் இடத்தில் இருந்து இருக்கிறார்

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு வீரரை பேசும்போது மரியாதையாக பேச வேண்டும். ஆனால் சேவாக் அந்த மரியாதை தெரியாதவர். சேவாக் வங்கதேச அணி குறித்து பேசுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணி 20 விக்கெட்டுகளை முழுமையாக கைப்பற்ற முடியாத அணி என்று கூறியிருந்தார். சச்சின், டிராவிட் போன்ற பெரிய வீரர்கள் ஒரு கருத்தை கூறும் முன்பு அதை எப்படி மரியாதையாக பேச வேண்டும் என்ற குணம் அவர்களுக்கு தெரியும்.

இதையும் படிங்க:விராட் கோலி மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரியுதா.? எல்லாருமே அதைத்தான் பண்றாங்க.. சஞ்சய் பங்கர் விளாசல்

ஆனால் சேவாக் அந்த மரியாதை தெரியாத வீரராக இருக்கிறார். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை என்று கூறி இருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பெயரலாகி வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles