டி20 உலக கோப்பையை வெல்ல இந்தியாவை விட ஆஸ்திரேலியாவிற்கே வாய்ப்புகள் அதிகம்.. காரணம் கூறுகிறார் பிராட் ஹாக்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற்று வரும் நிலையில், லீக் சுற்றுக்கள் முடிவடையும் நிலையில் உள்ளன.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8 சுற்றில் மோதும் நிலையில், அதில் ஆஸ்திரேலியா அணி வெல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலியாவின் முன்னால் வீரர் பிராடு ஹாக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பையில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி அயர்லாந்து, அமெரிக்கா, மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளோடு அடுத்த சுற்றில் இந்திய அணி மோதும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இந்த நிலையில் நிச்சயமாக இந்திய அணி ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளை வீழ்த்தி விடும் என்று நம்பப்படுகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி தான் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு சவாலாக விளங்கும். பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என்று மூன்று துறைகளிலும் இரு அணிகளும் வலுவாக இருப்பதால் இப்போட்டியின் வெற்றி வாய்ப்பு இரண்டு அணிகளுக்குமே சமநிலையில் இருப்பதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியை விட ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராடு ஹாக் கூறி இருக்கிறார்.இது குறித்து அவர் மேலும் கூறும் பொழுது
“சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதினால், அதில் ஆஸ்திரேலியா அணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நினைக்கின்றேன். ஏனென்றால் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் விளையாடி வருகிறது.

- Advertisement -

அதனால் இந்த மைதானங்களில் சூழ்நிலையை ஆஸ்திரேலியா அணி நன்கு அறிந்திருக்கும். ஆனால் இந்திய அணி வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான அமெரிக்க ஆடுகளங்களில் விளையாடிவிட்டு தற்போது வெஸ்ட் இண்டீஸ் வருகிறது. முதல் போட்டியே ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளதால் மைதானத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இந்திய அணி தகவமைத்துக் கொள்வது என்பது சிரமம்.

இதையும் படிங்க:ஸ்காட்லாந்திடம் தோற்று பரம எதிரியை வீட்டுக்கு அனுப்ப ஆஸ்திரேலியா திட்டம்.. ஹாசில்வுட்டின் மறைமுக பேச்சு

இதனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெறும். இந்திய அணி மற்ற இரண்டு அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டால் அப்போது வெற்றி வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் சமமாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார். ஆஸ்திரேலியா அணியும் லீக் சுற்றில் இருந்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles