ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அமெரிக்க அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
இந்த போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் ரவிச்சந்திரன் அஸ்வினின் 10 வருட டி20 சாதனையை உடைத்தார். மேலும் தனது சிறந்த பந்துவீச்சை இந்த போட்டியின் மூலம் பதிவு செய்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே குவித்தது. பேட்டிங்கில் அதிகபட்சமாக என் ஆர் குமார் 27 ரன்களும், டெய்லர் 24 ரன்களும் குவித்தனர். பந்துவீச்சில் அர்ஸ்தீப் சிங் நான்கு விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் ரிஷப் பண்ட் ஓரளவு விளையாட, அதற்கு பின்னர் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக நின்ற சிவம் தூபே 31 ரன்கள் குவித்து இருவரும் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் 10 ஆண்டுகால பந்துவீச்சு சாதனை தகர்த்தெறியப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் சில முக்கிய சாதனைகளும் படைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் போட்டியின் தொடக்கத்தில் முதல் பந்தை விசிய அர்ஸ்தீப் சிங் முதல் பந்தியிலேயே ஜஹாங்கீரை வெளியேற்றினார்.
இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற பெருமையையும் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பர் கோஸ்ன் விக்கெட்டையும் வீழ்த்தி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும் அஸ்வினின் மற்றும் ஒரு சாதனையையும் தகர்த்தார். 2014ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 11 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் அஸ்வின் கைப்பற்றுவார்.
இதையும் படிங்க:பும்ரா இந்திய அணியின் பொக்கிஷம்.. அவர் செய்ததை யாராலும் ஈடு செய்ய முடியாது.. கேஎல் ராகுல் பேட்டி
தற்போது அந்த சாதனையை அஸ்திப் சிங் இந்த போட்டியில் வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இது இவரது தனிப்பட்ட வகையிலும் சிறந்த பந்துவீச்சாக அமைந்திருக்கிறது. இவரது சிறந்த பந்துவீச்சு இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது.

