அவங்களால முடியும்போது ஏன் நம்மளால முடியாது.. என் டீம்கிட்ட நான் சொன்னது இது தான்.. வெற்றிக்குப் பின்னர் ரோஹித் சர்மா பேட்டி

டி20 உலக கோப்பையின் மிக முக்கிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

- Advertisement -

இந்த வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அணியின் செயல்பாடு குறித்தும், பும்ரா குறித்தும் சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆடுகளம் முதலிலேயே பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது தெரியும். மேலும் மழையின் காரணமாக கடினமாக மாறிய நியூயார்க் ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியினரை ரன்கள் குவிக்க முடியாமல் தடுத்தது. இருப்பினும் இந்திய அணி 10 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் என்று நல்ல நிலையில்தான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால் மேற்கொண்டு 30 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

- Advertisement -

பின்னர் 119 ரன்கள் இறுதியாக குவித்த இந்திய அணி பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதே சூழ்நிலையை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை விட சிறப்பாக செயல்பட்டு 113 ரன்கள் மட்டுமே குவிக்க வைத்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பும்ராவையும், இந்திய அணி வீரர்களையும் வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது
“நாங்கள் முதலில் பேட்டிங் செய்தபோது போதுமான அளவில் ரன்கள் குவிக்கவில்லை. முதல் பத்து ஓவர்கள் வரை எங்கள் பேட்டிங் நன்றாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு விக்கெட்டுகள் வீழ்ந்ததால் மேற்கொண்டு ரன்கள் சேர்க்க முடியவில்லை.

- Advertisement -

இப்படிப்பட்ட ஆடுகளத்தில் ஒவ்வொரு ரன்னும் எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அறிந்தோம். கடந்த போட்டிகளை ஒப்பிடும்போது இந்த முறை ஆடுகளம் பேட்டிங் செய்ய ஓரளவு நன்றாக இருந்தது. இப்படிப்பட்ட அருமையான பந்துவீச்சு அணியுடன் வேலை செய்யும்போது நீங்கள் மிகவும் நன்றாக உணர்வீர்கள். நாங்கள் பேட்டிங் செய்து முடித்த பின்னர் பந்து வீச்சாளர்களிடம் அவர்கள் நம்மை இவ்வளவு குறைந்த ரன்களில் சுருட்டும்போது ஏன் நம்மால் முடியாது என்று கூறினேன்.

இதையும் படிங்க:மழை பெய்து முடிந்ததுமே நான் ஒரு விஷயத்தை முடிவு பண்ணினேன்.. அதுவே எங்கள் வெற்றிக்கு காரணம்.. ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா பேட்டி

அணி வீரர்கள் ஒவ்வொருவரின் சிறிய பங்களிப்புமே மிகப்பெரிய மாற்றத்தினை உண்டாக்கும். பும்ரா வலிமையிலிருந்து மேலும் வலிமையாக உருமாறிக் கொண்டிருக்கிறார். அவர் பற்றி நான் மேற்கொண்டு எதையும் அதிகம் பேசப்போவதில்லை. தொடர் முழுவதுமே அவர் இதே போன்ற மனநிலையில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும் இங்குள்ள ரசிகர்களின் ஆதரவு அருமையாக இருந்தது. நாங்க இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது ” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles