இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முக்கியமான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை நடைபெற உள்ளது. இந்திய அணி அயர்லாந்து அணிக்கு இடையேயான போட்டியில் வெற்றியும், பாகிஸ்தான் அணி அமெரிக்க அணிக்கு இடையேயான போட்டியில் தோல்வியும் தழுவி இருக்கிறது.
இன்னும் புள்ளிக் கணக்கை தொடங்காத பாகிஸ்தான் அணி முந்தைய போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி வெற்றியாக வேண்டிய நிலைமையில் இருக்கிறது.
கிட்டத்தட்ட நாக் அவுட் போல கருதப்படும் பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற சுலபமாக இருக்கும். இந்த நிலையில் இந்திய அணியின் பலவீனம் குறித்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் கூறி இருக்கிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இரு அணிகளைப் பொறுத்தவரை தற்போது பந்துவீச்சில் சரிசமமாக உள்ளன. இந்த நிலையில் இந்திய அணி குறித்தும் ரோஹித் சர்மா குறித்தும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் தனது கருத்தை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது
” ரோகித் சர்மா எப்படிப்பட்ட ஒரு தரமான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் அவரின் விக்கெட்டை முதலிலேயே வீழ்த்த வேண்டியது மிகவும் அவசியம். 15 முதல் 20 பந்துகள் வரை அவர் எதிர்கொண்டு விட்டால் அதற்குப் பிறகு அவரை வீழ்த்துவது என்பது மிகவும் கடினம். அவரை ஆரம்பத்திலேயே வீழ்த்தினால் மட்டுமே உண்டு. இதனால் புதிய பந்தை பயன்படுத்தி அவரை விரைவிலேயே வீழ்த்த முயற்சிப்பேன்.
ரோகித் சர்மா 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் ஆடிய இன்னிங்ஸ் சிறப்பானது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்த ஆடுகளம் அப்போது பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் கூட தடுமாறிக் கொண்டிருந்தார். ஆனால் ரோஹித் சர்மா அந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினார்.
இதையும் படிங்க:வருண் சக்கரவர்த்தி இதனால் தான் டி20 உலக கோப்பைக்கு தேர்வாகவில்லை.. ரகசியம் உடைக்கும் அபிஷேக் நாயர்
அதன் பிறகு பக்கர் ஜமான் மற்றும் பாபர் ஆசாம் இடையே நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. அதன் பிறகு குல்தீப் யாதவ் மட்டுமே அவர்களது விக்கட்டை வீழ்த்தினார். அந்த சமயத்தில் பெய்த மழையால் நாங்கள் ரன் ரேட்டில் பின்தங்கி விட்டோம்” என்று கூறி இருக்கிறார். அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்திய அணியும் முதல் வெற்றியை பெற பாகிஸ்தான் அணியும் போராடும் என்றால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என்று சந்தேகம் இல்லை

