டி20 உலக கோப்பைக்கு பாகிஸ்தான் அணி வலுவான முறையில் தயாராகி வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை பாகிஸ்தான் அணியை வெகுவாக பாதித்தது.
இதன் காரணமாக பாகிஸ்தான் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் ஆஸம் விலக, அதற்கடுத்து பாகிஸ்தானின் தொடர் தோல்விகளால் மீண்டும் பாபர் ஆசாமையே பாகிஸ்தான் நிர்வாகம் கேப்டனாக அறிவித்தது.
இது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டனை பயிற்சியாளராக நியமித்தது. இந்த முறை டி20 உலக கோப்பையில் எப்படியாவது இந்திய பணியை வென்று விட வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.
ஏனென்றால் டி20 உலக கோப்பையை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி 2021ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உலக கோப்பையின் போது ஒரே ஒரு முறை மட்டுமே இந்தியாவை வீழ்த்தியது. அதற்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற அனைத்து போட்டியிலும் இந்திய அணியை பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பாபர் ஆசாமையே மீண்டும் கேப்டன் பொறுப்புக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். பிறகு கேப்டன் பொறுப்புக்கு அவர் சரியில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
தற்போது இது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறும் பொழுது
“ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியில் எதிர்கொள்ள உள்ளது. டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்திய அணியுடன் மோத உள்ளதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் சற்று அழுதத்தில் இருப்பார். பாபர் ஆசம் இந்த சூழ்நிலையில் அழுத்தத்தை சுமப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த அழுத்தத்தை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்று தெரியும். பாபர் ஆசம் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் கேப்டனாக அவர் இன்னும் முன்னேற வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. ரிஸ்வான் மற்றும் பகார் ஜமாத் ஆகியோர் அவருக்கு நல்ல ஆதரவு தருகிறார்கள். ஆனால் தொடர்ந்து அந்த மாதிரியான ஆதரவு அவருக்கு கிடைப்பதில்லை.
இதையும் படிங்க:இந்தியா உலகக் கோப்பையை வெல்லாததற்கு காரணமே இதுதான்.. இந்த ஒரு விஷயத்துல கோட்டை விடுறாங்க.. ரிக்கி பாண்டிங் பேட்டி
ஆனால் விராட் கோலிக்கு ஆதரவு தொடர்ந்து கிடைக்கிறது. இது மட்டுமே தற்போது பாபர் ஆசமுக்கு பற்றி எதிராக உள்ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை ஐசிசி தொடர்களில் சிறப்பாகவே செயல்படுகிறது. ஆனால் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளைப் போல தற்போது பாகிஸ்தான் அணி சிறப்பாக இல்லை. உலகக் கோப்பைக்கு பிறகு அந்த அணியில் செயல் திறனில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது பாகிஸ்தான் அணியை பாதித்துள்ளது” என்று கூறியிருக்கிறார்.

