டி20 உலக கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்து அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. டி20 உலக கோப்பையில் இந்திய அணி பெரும் முதல் வெற்றியாகும்.
இந்த வெற்றியின் மூலம் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் வரலாற்றில் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற எட்டாவது போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் நியூயார்க் மைதானத்தில் மோதின. போட்டியில் முதலில் பந்து வீச தீர்மானித்த இந்திய அணி அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சினை தாக்குப் பிடிக்க முடியாமல் அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சில் ஹார்த்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திய டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்தார். இதுவரை விளையாடிய 72 போட்டிகளில் 42 போட்டிகளில் வென்று கொடுத்திருந்தார். அவரது சாதனையை நெருங்கி அந்த ரோஹித் சர்மா எதிர்பாராத விதமாக 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓராண்டாக டி20 சர்வேச போட்டிகளில் விளையாட வில்லை.
இதனால் தோனியின் சாதனையை முறியடிக்க முடியாது என்று அனைவரும் நினைத்தனர். இந்த நிலையில் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா திரும்பவும் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. அப்போது தோனியின் 42 போட்டிகள் சாதனையை சமன் செய்திருந்தார் ரோஹித் சர்மா.
இதையும் படிங்க:5 ரன்னை தாண்டாத 7 பேட்ஸ்மேன்கள்.. ஹர்திக் பாண்டியா சிறப்பான பந்துவீச்சு.. இந்தியாவை சமாளிக்குமா அயர்லாந்து?
தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பையில் பெற்ற வெற்றியின் மூலம் 43 போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது தோனியின் சாதனையை முறியடித்து இருக்கிறார். தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கேப்டனாக ரோகித் சர்மா நான்காவது வரிசையில் இருக்கிறார். பாகிஸ்தானின் பாபர் ஆஸம் 46 வெற்றிகளையும், உகாண்டாவின் பிரைன் மசாபா 44 வெற்றிகளையும், இயான் மோர்கன் 44 வெற்றிகளையும், ரோகித் சர்மா தற்போது 43 வெற்றிகளையும் பெற்றுள்ளனர்.

