இந்திய அணி பழி வாங்கும் என்று தெரியும்.. ஆனா இந்த ஒரு விஷயத்தை கவனிக்கலனா திரும்பவும் எங்ககிட்டயே அடி வாங்குவாங்க.. டிராவிஸ் ஹெட் பேட்டி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியை இன்று அயர்லாந்து அணியுடன் எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

டி 20 கிரிக்கெட்டில் சாம்பியன் அணியை நிர்ணயிக்கப் போகும் இந்தத் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளே இறுதி போட்டியில் மோதும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருக்கின்றனர். மேலும் ஏற்கனவே இரண்டு முறை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு இந்த முறை நிச்சயமாக பழி வாங்கும் என்று ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர் ட்ராவிஸ் ஹெட் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற பிறகு தற்போது ஒன்பதாவது உலகக் கோப்பை நடைபெற்று வரும் போதிலும், இதுவரை அதற்குப் பின்னர் ஒரு உலக கோப்பை தொடரையும் வென்றதில்லை. மேலும் அது மட்டுமல்லாமல் எந்த ஒரு ஐசிசி தொடரையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அந்த வரலாறை மாற்றி அமைக்க தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கி கோப்பையை வெல்லும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அதற்குப் பிறகு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையிலும் ஆஸ்திரேலியா அணியிடமே தோல்வியை தழுவியது.

இதனால் இந்த முறை ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் இந்திய அணி அதற்கு நிச்சயமாக பழி வாங்கும் என்றும், ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் திரும்பவும் ஆஸ்திரேலியாவில் அடி வாங்க வேண்டி இருக்கும் என்று ஆஸ்திரேலியா வீரர் ட்ராவிஸ் ஹெட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ட்ராவிஸ் ஹெட் விரிவாக கூறும்பொழுது
“இது ஒரு நல்ல பைனலாக இருக்கும் என்று நினைக்கிறேன். குறிப்பாக கடந்த இரண்டு பைனல்களில் இந்தியாவிற்கு என்ன நடந்தது என்று அனைவரும் அறிவார்கள். இதனால் ஏதோ ஒரு தருணத்தில் இந்திய அணி அதற்காக நிச்சயம் பழி வாங்கும் என்று எனக்கு தெரியும். நிலைமை அவ்வாறு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதில் இறுதிப் போட்டியில் நாங்கள் இந்த முறை இருப்போம் என்றும் நம்புகிறோம்.

கண்டிப்பாக இறுதிப்போட்டியில் நீங்களும் இருப்பீர்கள். கடந்த இரு பைனல்களில் தோல்வியடைந்ததற்காக ரோஹித் சர்மா கவலைப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. அவர் நீண்ட காலமாக கேப்டனாக செயல்பட்டு வருவதால் இந்த தோல்விகளுக்காக அவர் மனம் வருந்த மாட்டார். இதனால் இந்திய அணியில் எந்த பிரச்சனையும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

இதையும் படிங்க:அடி தூள்.. சிஎஸ்கேவில் இணைகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.. தோனிக்கு அடுத்து பெரிய பொறுப்பு.. கொண்டாட்டத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

இந்தியா தற்போது நல்ல நிலையிலே இருக்கிறது. ஆனால் அவர்கள் இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடுவது மிகவும் முக்கியம். விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு இந்த முறை வாய்ப்புகள் அதிகம். இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு போட்டி போடும் மூன்று முதல் நான்கு அணிகளில் இந்திய அணியும் ஒன்று” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles