உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி நாளை அயர்லாந்து அணியுடன் தனது முதல் போட்டியை எதிர்கொள்ள உள்ளது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணியை பலவீனப்படுத்துகிறார்கள் என்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் உள்ள வசதி நம்மிடம் இல்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியிருக்கிறார்.
கிரிக்கெட்டை பொறுத்தவரை பகுதி நேர பந்துவீச்சாளர்களின் தேவை என்பது அவசியமான ஒன்றாக மாறுகிறது. ஏனென்றால் அணியில் உள்ள முன்னணி பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகள் எடுக்காத சூழ்நிலையில், பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் விக்கெட்டுகள் வீழ்த்தி கொடுப்பார்கள். இதில் இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி பகுதி நேர பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்துவார்.
ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை நான்கு பீல்டர்கள் மட்டும் வெளிவட்டத்தில் நிற்க அனுமதிக்கப்படுவதால், பகுதி நேர பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகள் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. அதனால் அவர்களது தேவை ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிகம் தேவைப்படுவதில்லை. ஆனால் டி20 கிரிக்கெட் பொறுத்தவரை ஐந்து பீல்டர்கள் வெளிவட்டத்தில் இருக்க அனுமதிக்கப்படுவதால் இத்தகைய பந்துவீச்சாளர்கள் அவசியமாகிறார்கள்.
இந்திய அணியில் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இல்லை என்றும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் அத்தகைய வசதி இருக்கிறது என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பதான் கூறும் பொழுது
“இந்திய அணியின் பேட்டிங்கை அதிகப்படுத்த விரும்பினால் மூன்றாவது பந்துவீச்சாளராக அக்சார் பட்டேலை உள்ளே கொண்டு வரலாம்.
அல்லது சிவம் துபேவை களம் இறக்கலாம். ஜெய்ஸ்வாலும் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் பந்து வீசக்கூடியவர் என்பதால் மாற்று வாய்ப்பாக அவரையும் உள்ளே கொண்டு வரலாம். ஏனென்றால் வலைகளில் பந்து வீசி இருக்கிறார் என்று அவரே கூறி இருக்கிறார். ஒருவேளை ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் முழுமையாக வீசினால் இந்த பிரச்சனை இல்லை. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் பந்து வீசாத காரணத்தினால் அணி பலவீனமானதாக தெரிகிறது.
இதையும் படிங்க:இந்திய அணியின் சிறந்த பிளேயிங் லெவன்.. நாளை அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டி.. இரண்டு முக்கிய மாற்றங்கள்
ஆஸ்திரேலியாவில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பந்து வீசும் திறமையை பெற்றுள்ளனர். மேலும் இங்கிலாந்து அணியிலும் மொயின் அலி, வில் ஜாக்ஸ் போன்ற பந்துவீச்சாளர்களும் இருக்கின்றனர். இதனால் அந்த இரு அணிகளிடம் இருக்கும் வசதி நம்மிடம் இல்லை” என்று இர்பான் பதான் கூறியிருக்கிறார். அயர்லாந்து அணியுடன் ஆன போட்டிக்கு பிறகு இந்திய அணி ஒன்பதாம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

