இந்தியா உலகக் கோப்பையை வெல்ல நான் காரணமில்லை.. இவர்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமாகாது.. ரகசியம் உடைக்கும் கௌதம் கம்பீர்

தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் வருகிற டி20 உலக கோப்பை உடன் அவரது பயிற்சி காலம் முடிவுக்கு வருகிறது.

- Advertisement -

அதற்குப் பிறகு பயிற்சியாளராக தொடர அவர் விருப்பம் தெரிவிக்காத நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் சில நிபந்தனைகளுடன் பயிற்சியாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த சூழலில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்திய பயிற்சியாளரின் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளிவந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது பயிற்சியாளர் பதவிக்கு கௌதம் கம்பீர் உடன் இறுதிப் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த கௌதம் கம்பீர் அண்மையில் துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு தான் பயிற்சியாளராக வர விரும்புவதாக மறைமுகமாக தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

“நீங்கள் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் இந்திய அணியை எப்படி உலக கோப்பையை வெல்ல வைப்பீர்கள்” என்று ஒரு மாணவர் கேள்வி கேட்டார். அதற்கு கௌதம் கம்பீர் அளித்த பதில் பின்வருமாறு
“நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவதை மிகவும் விரும்புகிறேன். ஒரு தேசிய அணிக்கு பயிற்சியாளராக வருவதை விட பெரிய மரியாதை எதுவும் இருக்க முடியாது.

உலகத்தில் உள்ள 140 கோடி இந்தியர்களையும் நாம் அங்கீகாரம் செய்கிறோம். அதை விட பெரிய மரியாதை வேறு என்ன இருக்க முடியும். இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கு நான் காரணம் இல்லை. 140 கோடி இந்திய மக்களும் தான் காரணம். மக்கள்தான் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல விரும்புகிறார்கள்.

- Advertisement -

அவர்களின் பிரார்த்தனையே இந்திய அணி கோப்பைகளை வெல்ல உதவுகிறது. அவர்கள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால் நாங்கள் சிறப்பாக விளையாடி அவர்களை அங்கீகாரப்படுத்துவோம். இந்தியா இந்த உலகக் கோப்பையை கட்டாயமாக வெல்லும் என்று நம்புகிறேன். அதற்கு மிக முக்கியமான விஷயம் வீரர்கள் பயமின்றி விளையாட வேண்டும்” என்று கௌதம் கம்பீர் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:ஒரு கிரிக்கெட் வீரர் நாட்டுப்பற்றே இல்லாமல் இப்படியா பேசுவது.? ரியான் பராக்கை விளாசும் இந்திய ரசிகர்கள்.. காரணம் என்ன?

கௌதம் கம்பீர் கூறியதன் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது அடுத்த பயிற்சியாளராக அவரே வர வாய்ப்பு இருப்பதாக மறைமுகமாக சொல்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கௌதம் கம்பீர் வழி நடத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கேப்டனாக இருந்தபோதே கொல்கத்தா அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles