எங்களைப் போல மற்ற அணிகள் இதை செய்திருக்குமா? என்று தெரியவில்லை.. எங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது.. தோல்விக்குப் பின்னர் டு பிளஸ்சிஸ் பேட்டி

ஐபிஎல் தொடரின் முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

பெங்களூர் அணியின் தோல்வி குறித்து அணியின் கேப்டன் டுபிளஸ்சிஸ் முக்கியமான காரணங்களை கூறியிருக்கிறார். மேலும் இம்பாக்ட் பிளேயர் விதியால் என்ன மாற்றம் நடந்தது என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது. மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக காணப்பட்டாலும் ராஜஸ்தான் அணியின் அபார பந்துவீச்சால் பெங்களூர் அணி இந்த இலக்கை மட்டுமே அடைய முடிந்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக பட்டிதார் 34 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

அதன் பிறகு இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஒரு முனையில் போராட மறுமுனையில் வந்த பேட்ஸ்மேன்கள் துரிதமான ரன்களை சேர்த்து ஆட்டம் இழந்தனர். பின்னர் மிடில் ஆர்டரில் ரியான் பராக் அபாரமாக விளையாடிய ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 174 ரன்கள் குவித்து ஆறு பந்துகள் மீதும் வைத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி தனது அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பெங்களூர் அணியின் தோல்விக்கு பின்னர் அந்த அணியின் கேப்டன் டூப் பிளஸ்சிஸ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது
“இந்த ஆடுகளத்தில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருந்த போதும் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். அதுதான் இங்கு பெரிய வித்தியாசமாக பார்க்கப்பட்டது. இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நம்பலாம். முதலில் பந்து கொஞ்சம் திரும்புகிறது, அதன் பிறகு பிட்ச் ஸ்லோவ் ஆகிறது என்பது போன்ற காரணங்களால் நீங்கள் ஒரு ஸ்கோரை கணிக்க முடியும்.

- Advertisement -

ஆனால் இங்குள்ள இம்பேக்ட் பிளேயர் விதியின் மூலம் நீங்கள் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் ஆட வைக்க முடியும். இந்த காரணத்தால் நீங்கள் இவ்வளவு ரன்கள் எடுத்தால் போதும் என்ற வெற்றி இலக்கை நிர்ணயிக்க முடியாது. ஆனால் எங்கள் அணியில் வீரர்கள் சிறப்பாக போராடினார்கள். அதுதான் மிகவும் முக்கியம். நிறைய அணிகளால் இதுபோல செய்திருக்க முடியுமா? என்று தெரியவில்லை. நாங்கள் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று இந்த நிலையை அடைந்துள்ளோம்.

இதையும் படிங்க:சிஎஸ்கேவை ஜெயிச்சாலே ஐபிஎல் கப் ஜெயிச்சிரலாம்னு நினைச்சுட்டாங்க போல.. விளாசும் அம்பத்தி ராயுடு

இது எங்கள் குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. எங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது. இன்றைய நாளில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பது தான் உண்மை. நாங்கள் இருவது ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles