ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் தோல்விக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மகேந்திர சிங் தோனி அடுத்த நாளே பெங்களூரிலிருந்து தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு கிளம்பினார்.
இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மகேந்திர சிங் டோனி தனது குடும்பத்தினருடன் முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது வருடத்திற்கு இரண்டு மூன்று மாதங்கள் மட்டும் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு திரும்பவும் தனது சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி விடுகிறார்.
அவ்வப்போது மகேந்திர சிங் தோனி குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவரே வெளியிடுவது வழக்கம். இதன் மூலம் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறார் என்று ரசிகர்களும் அறிந்து கொள்வார்கள். தனது சொந்த ஊரான ராஞ்சியில் விவசாய நிலம் வைத்துள்ள மகேந்திர சிங் தோனி அதில் விவசாயமும் செய்து வருகிறார்.
பைக் பிரியரான மகேந்திர சிங் தோனி தனது வீட்டில் எண்ணற்ற பைக்குகளை வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பைக் மாடல்களை தனது வீட்டில் வைத்திருக்கிறார். மேலும் வருடத்திற்கு ஒருமுறை ஐபிஎல் தொடரில் மட்டும் கிரிக்கெட் விளையாடி வரும் தோனி இளம் வீரர்களைப் போன்று உடல் தகுதியில் பிட்டாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து மகேந்திர சிங் தோனி விரிவாக கூறும் பொழுது
“சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் தொடர்களில் விளையாடுவது மிகவும் கடினம். ஏனெனில் இளம் வீரர்களைப் போன்று உடல்நிலையை மிகவும் பிட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் இங்கு வயதை பார்த்து யாரும் சலுகை தர மாட்டார்கள். தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாடுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
நீங்கள் விளையாடும் போது உங்கள் அணியின் சகவீரரை போன்று நல்ல உடல் தகுதியோடு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய போது எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க விரும்பினேன். மேலும் எனது மனதை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு விவசாய நிலம், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பழைய மாடல் கார்கள் போன்றவை மிகவும் பிடிக்கும்.
இதையும் படிங்க:கோலி இல்லாம இந்த விஷயத்தை உங்களால பண்ணவே முடியாது.. அவரை எப்படி கழட்டி விடணும்னுதான் பாக்குறீங்க.. கோலி குறித்து ரிக்கி பாண்டிங்
இவையே எனது மன அழுத்தத்தை பெரும்பாலும் குறைக்கின்றன. எனக்கு மன அழுத்தம் ஏற்படும்போது எல்லாம் எனக்கு பிடித்த வாகனத்தில் சிறிது தூரம் பயணம் செய்வேன். அப்போது என் மன அழுத்தமெல்லாம் காணாமல் போய்விடும் “என்று மகேந்திர சிங் தோனி கூறி இருக்கிறார். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றோடு வெளியேறிய நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்று தோனிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

