நாம் செய்கின்ற செயலுக்கு உண்மையாக இருந்தால் போதும்.. கடவுள் நமக்கு ஒரு திட்டம் வைத்திருப்பார்.. வெற்றிக்குப் பிறகு பேசிய விராட் கோலி

சில வாரங்களுக்கு முன்பாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. நாம் செய்யும் செயலுக்கு உண்மையாக இருந்தால் கடவுள் நமக்கு ஒரு திட்டம் வகுப்பார் என்று ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி உத்வேகம் அளிக்கும் வார்த்தைகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மே 3ஆம் தேதி வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. இதனால் இந்த அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறும் என்று அனைவராலும் கணிக்கப்பட்டது. பெங்களூர் ரசிகர்கள் கால்குலேட்டரை வைத்து இவையெல்லாம் பெங்களூர் அணிக்கு சாதகமாக இருந்தால் ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று கணக்கு போட்டனர்.

- Advertisement -

ஆனால் ஆர்சிபி அணி அந்தக் கணக்கை உண்மைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கடைசியாக நடைபெற்ற ஆறு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இருக்கிறது. தோல்வி நிலையில் இருந்த போது விராட் கோலி ஆர்சிபி மகளிர் அணியினரிடம் ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். சில நேரங்களில் நாம் வெற்றி பெறுவதற்கு ஒரு சதவிகித வாய்ப்பே இருக்கும்.

ஆனால் வெற்றி பெற அந்த ஒரு சதவிகித வாய்ப்பே போதுமானதாக இருக்கும் என்று பேசியதோடு மட்டுமல்லாமல் அதை நடைமுறையிலும் செயல்படுத்தி தற்போது ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு கொண்டு வந்திருக்கிறார். பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல 0.2 சதவிகித வாய்ப்பே இருந்த போதிலும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மிகச் சிறந்த கம்பேக் கொடுத்து மற்ற அணிகளை அச்சப்பட வைத்துள்ளது.

- Advertisement -

இந்த சீசனில் அபாரமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் விராட் கோலி இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 708 ரன்கள் குவித்திருக்கிறார். தற்போது இவருக்கு பேட்டிங் ஃபார்ம் இப்படியே தொடரும் பட்சத்தில் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தற்போது பெங்களூர் அணி களம் இறங்கியுள்ளது.

இதையும் படிங்க:மனம் தளராதீங்க.. பல வெற்றிகள் உங்களுக்கு காத்திருக்கிறது.. ருத்ராஜை ஆறுதல் படுத்திய சுரேஷ் ரெய்னா ட்வீட்

இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றிக்கு பின்னர் பேசிய விராட் கோலி “நீங்கள் செய்கின்ற செயலுக்கு நேர்மையாக இருந்தாலே போதும். கடவுள் உங்களுக்கு ஒரு திட்டம் வைத்திருப்பார். நாங்கள் நேர்மையாக நல்ல முறையில் விளையாடி கடின உழைப்பை கொடுத்திருக்கிறோம். அதற்கான பலனையும் தற்போது அறுவடை செய்து வருகிறோம். இதற்கு மேல் பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது கவனம் தற்போது அடுத்த போட்டியில் உள்ளது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles