மனம் தளராதீங்க.. பல வெற்றிகள் உங்களுக்கு காத்திருக்கிறது.. ருத்ராஜை ஆறுதல் படுத்திய சுரேஷ் ரெய்னா ட்வீட்

ஐபிஎல் தொடரின் முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பெங்களூர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை அணியை பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேற்றியது.

- Advertisement -

14 புள்ளிகளைப் பெற்று நல்ல ரன் ரேட்டில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தற்போது தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னா தற்போதைய கேப்டன் ருத்ராஜூக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரை பொருத்தவரை சென்னை அணியின் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்துமே வலு இழந்து காணப்பட்டது. ஏனெனில் இந்த சீசன் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே முன்னணி வீரரான டெவான் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார்.

- Advertisement -

அவருக்குப் பிறகு வேகப்பந்துவீச்சாளர் பத்திராணா மற்றும் முஸ்தபிகுர் ரஹ்மான் ஆகியோரும் போட்டிகளின் போது சில சில காயங்களால் ஒரு சில போட்டிகளை தவற விட்டனர். மேலும் டி20 உலக கோப்பையின் காரணமாக தற்போது இந்த இரண்டு வேகப்பந்துவீச்சாளரும், இங்கிலாந்து ஆல்ரவுண்டரான மொயின் அலி ஆகியோர் சென்னை அணியில் இருந்து வெளியேறி விட்ட நிலையில், முன்னணி வீரர்கள் இல்லாமல்தான் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியை எதிர்கொண்டது.

முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையில் 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில், தற்போதைய தோல்வியால் மனம் தளர வேண்டாம் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ருத்ராஜை ஆறுதல் படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது
“சிஎஸ்கே அணியை தலைமை தாங்கி முன் நின்று வழி நடத்திய ருத்ராஜூக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்கு எனது வாழ்த்துக்கள். உங்களுக்கு இன்னும் பல வெற்றிகள் குவிய போகிறது. வருங்காலத்தில் நீங்கள் இன்னும் ஜொலித்துக் கொண்டே இருப்பீர்கள். எனவே இந்த ஒரு தோல்வியினால் நீங்கள் மனம் தளர வேண்டாம் ” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:தோனியை பற்றி யோசித்தால் பைத்தியம் பிடித்து விடும்.. அந்த உண்மை அவருக்கு மட்டுமே வெளிச்சம்.. வந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ்

சுரேஷ் ரெய்னாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மகேந்திர சிங் தோனியும் இந்த சீசனில் காயத்துடனே முழு தொடரிலும் விளையாடி வந்தார். இதனால் அடுத்த சீசனில் சென்னை அணி முழு பலத்துடன் களமிறங்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles