தோனியை பற்றி யோசித்தால் பைத்தியம் பிடித்து விடும்.. அந்த உண்மை அவருக்கு மட்டுமே வெளிச்சம்.. பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு ஓய்வு பெற்று விடுவாரா? என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி தற்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது காயத்துடன் விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டோடு ஓய்வு பெறுவாரா? என்ற கேள்விக்கு சிஎஸ்கேவின் பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் முக்கியமான கருத்து ஒன்றை கூறி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய போது அப்போது விளையாடிய அம்பத்தி ராயுடு கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். அந்த ஆண்டில் மகேந்திரசிங் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இனங்க எனது உடல் ஒத்துழைத்தால் அடுத்த ஆண்டு விளையாடுவேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அதேபோல தனது முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட தோனி கடந்த ஒரு வருடமாக ஓய்வெடுத்து பின்னர் நன்றாக இந்த ஐபிஎல் தொடரில் விளையாடினார். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட தசைநார் கிழிவு காரணமாக காயத்துடனே இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடி வருகிறார். ஏனெனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தற்போது சென்னை அணியில் இல்லாததால் அவரே விக்கெட் கீப்பிங் பணியையும் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

காயத்தால் சிரமப்படும் தோனி இந்த ஆண்டு ஓய்வு பெற்று விடுவார் என்று அனைவரும் கருதும் வேளையில் அது குறித்த அறிவிப்பு தற்போது வரை வெளிவரவில்லை. எனவே இந்த நிகழ்வு குறித்து சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறும் போது
“தோனியின் எதிர்காலத்தை யோசித்தால் யாருக்குமே பைத்தியம் பிடித்து விடும். ஐபிஎல் தொடருக்கு முன்பாக அவர் வலைகளில் விளையாடுவதை பார்த்திருக்கிறேன். அவர் அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார். கிரிக்கெட்டிலும் தனது சொந்த வாழ்விலும் மிகச் சிறந்த நபராக தோனி வெளிப்படுகிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனியை பற்றி கூற வேண்டும் என்றால் அவர் விளையாடும் போது பல சிக்கலில் இருந்து உங்களை விடுவிக்கும். அவர் விளையாடினால் வெற்றி குறித்து சந்தேகப்பட தேவையில்லை. தனி ஆளாக மகேந்திர சிங் தோனி போட்டியை வெல்லக்கூடிய திறன் படைத்தவர். அவர் அணிக்குள் தன்னம்பிக்கையை மிக எளிதில் கொண்டு வந்து விடுவார்.

இதையும் படிங்க:என்னது 6வது கப்பா.?. இந்த டீமை வச்சுக்கிட்டு இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்.. தோல்விக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் பேட்டி

மேலும் மகேந்திர சிங் தோனி விளையாட்டு பற்றிய புரிதலை மிக எளிமையாக வைத்திருக்கிறார். அவர் மற்ற வீரர்களுக்கும் அதை கடத்த முயல்கிறார். அது மகேந்திரசிங் தோனிக்கு இயல்பாகவே வாய்த்து இருக்கறது நீங்கள் விளையாட்டை எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்பதில்தான் தோனி பிரம்மாண்டமானவர்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles