ஆர்சிபியின் வெற்றிக்கு காரணமே தோனி தான்.. தோனியால்தான் எங்களுக்கு இந்த மாற்றம் நடந்தது.. சீக்ரெட்டை உடைக்கும் தினேஷ் கார்த்திக்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் இந்த வெற்றிக்கு தோனியின் பங்கு முக்கிய காரணம் என்று தினேஷ் கார்த்திக் கூறியது ரசிகர்களிடையே குழப்பம் அடைய செய்திருக்கிறது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியின் முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மூன்று ஓவர்களில் ஏற்பட்ட மழையின் காரணமாக, ஆட்டம் தடை பட அதற்குப் பிறகு மைதானத்தின் ஈரப்பதத்தினால் பந்து சுழன்று வர பெங்களூர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

- Advertisement -

இருப்பினும் டூப்ளஸ்சிஸ் அபாரமாக விளையாடி 54 ரன்கள் குவித்தார். பின்னர் விராட் கோலி 47 ரன்களும், பட்டி தார் 41 ரன்களும் குவித்தனர். இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கி விளையாடியது. சென்னை அணியின் தொடக்க வைக்கட்டுகள் விரைவிலேயே வெளியேறினாலும் அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ரகானே மற்றும் ரவீந்திரா ஜோடி பெங்களூர் அணியின் பந்துவீச்சு சிறப்பாக கையாண்டு விளையாடியது.

இந்த சூழ்நிலையில் பந்து ஈரப்பதமாக இருப்பதால் வேறு பந்தினை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று பெங்களூர் அணியின் கேப்டன் டூப்ளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் நடுவரிடம் சென்று முறையிட, ஆனால் அதற்கு நடுவர் அனுமதி தர மறுத்து விட்டார். இதனால் பெங்களூர் பந்துவீச்சாளர்கள் சரியான லைன் அண்ட் லெந்தில் பந்து வீச முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய 17 ரன்கள் தேவைப்பட, ஆட்டத்தின் 19 ஆவது ஓவரின் முதல் பந்தில் மகேந்திர சிங் தோனி முதல் பந்தை 110 மீட்டருக்கு ஒரு அபார சிக்சருக்கு அடிப்பார்.

- Advertisement -

அந்தப் பந்து கூரையின் மேல் விழுந்து காணாமல் போக, அதற்கு பின் வேறு பந்து மாற்றம் செய்யப்பட்டு யாஷ் தாகூர் வீச, அடுத்த பந்திலேயே தோனி ஆட்டம் இழந்து வெளியேறுவார். இதனால் அந்த ஓவரில் வெறும் ஏழு ரன்கள் மட்டுமே சென்னை குவிக்க 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க:பதட்டத்தை ஏற்படுத்திய தோனி.. கடைசி ஓவரை அபாரமாக வீசிய யஷ் தயாள்.. விருதை அவருக்கு கொடுங்க.. டூ பிளசிஸ் பேட்டி

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும்பொழுது
“இன்று நடந்த ஒரு சிறப்பான விஷயம் மகேந்திர சிங் தோனி பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தது ஆட்டத்தை மாற்றி விட்டது. அதற்குப் பிறகுதான் எங்களுக்கு புதிய பந்து கிடைத்தது. இதனால் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச வழியும் வகுத்தது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles