பதட்டத்தை ஏற்படுத்திய தோனி.. கடைசி ஓவரை அபாரமாக வீசிய யஷ் தயாள்.. விருதை அவருக்கு கொடுங்க.. டூ பிளசிஸ் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

- Advertisement -

இந்த போட்டியின் கடைசி ஓவரை அற்புதமாக வீசிய யாஷ் தயாளுக்கு ஆட்டநாயகன் விருது வழங்க வேண்டும் என்று பெங்களூர் அணியின் கேப்டன் டூ பிளசிஸ் கூறி இருக்கிறார். பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்தது.

- Advertisement -

இதன்படி டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி மூன்று ஓவர்களில் 31 ரன்கள் குவித்திருந்த போது மழை காரணமாக சிறிது நேரம் தடைபட்டது. அதன் பிறகு ஆட்டம் துவங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. விராட் கோலி 47 ரன்கள், பிளசிஸ் 58 ரன்கள், பட்டித்தார் 41 ரன்கள், கிரீன் 38 ரன்கள் குவிக்க, பெங்களூர் அணி 20 ஓவரில் 218 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 200 ரன்கள் எடுத்தாலே சென்னை பிளே ஆப் சுற்றுக்குள் சென்று விடும் என்று நிலைமையில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் கேப்டன் ருத்ராஜ் ஆட்டமிழக்க, ரவீந்திரா, ரகானே ஜோடி சிறப்பாக விளையாடி 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, பின்னர் கடைசியில் தோனி, ஜடேஜா கூட்டணி 27 பந்துகள் 61 ரன்கள் குவித்தாலும் தோனி களத்தில் நின்ற போது கடைசி ஓவரை அபாரமாக வீசிய தயாள் சிறப்பாக பந்து வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. பெங்களூர் அணியின் கேப்டன் டூ ப்ளஸ்சிஸ் இந்த வெற்றி குறித்து கூறும் பொழுது
“பெங்களூர் அணி லீக் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஐபிஎல் தொடரில் இன்று விளையாடிய பிட்ச் போல் கடினமான ஆடுகளத்தில் இதுவரை விளையாடவில்லை. மழை பெய்து முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது 150 ரன்கள் எடுப்பது சிரமம் என்று நினைத்தோம்.

- Advertisement -

ஆனால் எங்கள் பேட்ஸ்மேன்கள் அபாரமாக பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டனர். கடந்த ஆறு போட்டிகளாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். ஒரு கட்டத்தில் தோனி கடைசி ஓவரில் நின்ற போது பதட்டம் ஏற்பட்டது. அவர் எத்தனை முறை இறுதிவரை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் கடைசிவரை சிறப்பாக பந்து வீசிய தயாளுக்கு ஆட்டநாயகன் விருது கொடுத்தாக வேண்டும்.

இதையும் படிங்க:பிளே ஆப் கதவை அடித்து நொறுக்கிய ஆர்சிபி.. 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. வெளியேறியது சென்னை அணி

கடைசி ஓவரை ஸ்லோயர் பால்களாக வீசும் படி கேட்டுக் கொண்டேன். மேலும் எந்த கவலையும் இன்றி மகிழ்ச்சியாக உங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறினேன். இந்த இரு அணிகளுக்கிடையே ஆட்டம் எப்போதுமே ரசிகர்களுக்கு பரபரப்பாக இருக்கும். குறிப்பாக ரசிகர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். நாங்கள் தோல்வியடைந்த போதும் எங்களுக்கு ஆதரவாக ஆர்சிபி ரசிகர்கள் இருந்தனர்”என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles