சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக பாப் டு ப்ளஸ்சிஸ் மகேந்திர சிங் தோனி குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஏனென்றால் இங்கு மழையின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. இரண்டு அணிகளுக்குமே இந்த போட்டி மிகவும் முக்கியமானது. ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல இதுவே கடைசி வாய்ப்பாக இருப்பதால் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனிக்கு இதுவே கடைசி சீசனாக அமையக்கூடும். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தினேஷ் கார்த்திக்கு இதுவே கடைசி சீசன் என்பதால் இது கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி அணி வீரர்களுக்கும் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக அமைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் டாஸ் போடப்பட்ட பிறகு சென்னை அணிக்காக முன்பு விளையாடிய பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டு பிளஸ்சிஸ் மகேந்திர சிங் தோனி குறித்தும், அவரது ஓய்வு குறித்தும் சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார். மேலும் இந்த சொந்த மைதானத்தில் சொந்த ரசிகர்களின் முன்பு விளையாடுவது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து விரிவாக பாப் டு பிளசிஸ் கூறும்பொழுது
“சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவது குறித்து மக்கள் கடந்த ஆறு வருடங்களாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அணியில் நமது அணியில் நாம் என்ன செய்கிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரியும். இதனால் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டியது மகேந்திர சிங் தோனி மட்டுமே ஆகும்.
இந்தப் போட்டி எங்கள் சொந்த மைதானத்தில் சொந்த ரசிகர்களின் முன்பாக நாங்கள் விளையாடுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஆகும். ஆனால் நாங்கள் இந்த போட்டியை மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும் எதிர்கொள்ளப் போகிறோம். வெற்றி தோல்வி என்பதை தாண்டி இந்த ஆட்டத்தில் நாங்கள் 100% உழைப்பை கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம். என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:நான் டூப்ளசிஸ்கிட்ட சத்தியம் வாங்கி இருக்கேன்.. எங்களுக்கு எதிரா இதை பண்ண கூடாதுன்னு.. சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் பேட்டி
தற்போது பேட்டிங் தொடங்கியிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சற்று முன்பு வரை மூன்று ஓவர்களுக்கு 31 ரன்கள் குவித்த நிலையில் இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தாமதமாகியுள்ளது. மழையின் தாக்கம் சிறிது குறைந்துள்ளதால் தற்போது மீண்டும் ஆட்டத்தை தொடங்க சின்னசாமி மைதானம் தயாராகி வருகிறது.

