நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பத்து போட்டிகளில் தோல்வி அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்துடன் முடிக்கிறது.
மேலும் இந்த சீசனோடு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மாவும் விலகுகிறார் என்ற தகவல் வைரல் ஆகி வரும் நிலையில், அது குறித்து அணியின் பயிற்சியாளர் ஆன மார்க் பவுச்சர் சில சூசகமான தகவல்களை கூறியிருக்கிறார்.
இந்த சீசனின் தொடக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. மும்பை ரசிகர்களின் எதிர்ப்பும் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் மோசமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சும் அவரது கேப்டன்சியை நிலைகுலைய வைத்துள்ளது.
மேலும் இந்த சீசன் தொடக்கத்தில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல் வெளியாகியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா இந்த சீசனோடு விலகுகிறார் என்று கூறப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளரோடு ரோஹித் சர்மா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி போட்டிக்குப் பிறகு பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ரோஹித் சர்மா குறித்து சில சூசகமான தகவல்களை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“என்னை பொருத்தவரை இந்த முடிவு ரோகித் சர்மாவின் கைகளில் மட்டுமே உள்ளது. அடுத்தது மெகா ஏலம் நடைபெற உள்ளதால் இதற்கு அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்று யாருக்குமே தெரியாது.
நேற்று ரோகித் சர்மா உடன் உரையாடினேன். அடுத்த திட்டம் குறித்து கேட்டபோது எனது ஒரே திட்டம் டி20 உலக கோப்பை மட்டுமே என்று கூறினார். இதனால் தற்போது டி20 உலக கோப்பை மட்டுமே அவரது ஒரே குறிக்கோளாக இருக்கிறது. ரோகித் சர்மாவுக்கு இந்த சீசன் இரண்டு சீசன்களாக அமைந்துள்ளது முதல் பாதியில் நன்றாக விளையாடினார். ஆனால் இரண்டாவது பாதியில் அவரால் சரியாக விளையாட முடியவில்லை.
இதையும் படிங்க:மஹி பாயும், நானும் இணைந்து விளையாடுவது இதுவே கடைசி.. ஷாக் கொடுத்த விராட் கோலி.. வருத்தத்தில் ரசிகர்கள்
டி20 கிரிக்கெட் பொறுத்த வரையில் இது சாதாரணம்தான். எனவே இதனால் அவருக்கு இரண்டு சீசன்களாக அமைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இதனால் ரோகித் சர்மா விலகுவது கிட்டத்தட்ட உறுதியாக உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் இருக்கின்றனர். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த வருட இறுதியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

