சிஎஸ்கே தோனியின் இடத்தில் இப்போ நான் இருக்கணும்.. அன்னைக்கு எனக்கு அது தோணல.. ரகசியம் உடைக்கும் சேவாக்

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பித்த தற்போது 17 சீசன்கள் வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. ஐபிஎல்-லை பொறுத்தவரை அதன் முதல் ஏலம் சற்று சுவாரசியமானதாக இருக்கும்.

- Advertisement -

ஏனெனில் அனைத்து வீரர்களும் ஏலத்திற்கு செல்வதற்கு முன்பு அணிகள் தங்கள் அடையாள வீரர்களை எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு அணிக்கும் ஒரு நட்சத்திர பெயர் சொல்லக்கூடிய ஒரு வீரரை எடுத்துக் கொள்ளலாம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின், பஞ்சாப் அணிக்கு யுவராஜ், பெங்களூர் அணிக்கு டிராவிட் என்பது போல அவ்வாறு எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனிக்கு பதிலாக நான்தான் கேப்டனாகி இருக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் ரகசியத்தை உடைத்திருக்கிறார். முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐடியல் வீரர்களாக யாரும் வரவில்லை. மகேந்திர சிங் தோனி ஏலத்திற்கு போனால் அதிக பணம் கிடைக்கும் என்பதால் ஐடியல் வீரராக வர விருப்பம் இல்லை என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சென்னை அணி தோனியை அதிக விலை கொடுத்து வாங்கியது. அதற்கு அடுத்ததாக டெக்கான் சார்ஜர்ஸ் அணி சைமன்சை அதிக விலை கொடுத்து வாங்கியது. இந்த நிலையில் சென்னை நிர்வாகம் தன்னிடம் அணுகிய விதம் குறித்து வீரேந்திர சேவாக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாகக் கூறும்போது
“வி.பி சந்திரசேகர் அவர்கள் சென்னை அணிக்கு வீரர்களை தேர்வு செய்து கொண்டிருந்தார். அப்போது நீங்கள் சென்னை அணிக்கு ஐடியில் வீரராக வரவேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் நான் அதற்கு பார்க்கலாம் என்று கூறி இருந்தேன்.

- Advertisement -

பின்னர் டெல்லி அணியில் ஐடியல் வீரராக வர வாய்ப்பு வந்தது அந்த வாய்ப்பை நான் ஏற்றுக் கொண்டதால் ஏலத்திற்கு செல்லவில்லை. ஒருவேளை நான் ஏலத்திற்கு சென்று இருந்தால் என்னை சென்னை நிர்வாகம் வாங்கி கேப்டனாக நியமித்திருக்கும். அதற்குப் பிறகுதான் மகேந்திர சிங் தோனியை அணுகி அவரை கேப்டனாக ஆக்கினார்கள்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:2024 ஐபிஎல் பெஸ்ட் கேப்டன்.. இந்த 2 பேர சமாளிக்கறதுக்காகவே இவர நான் பெஸ்ட் கேப்டனா தேர்ந்தெடுப்பேன்.. டிவில்லியர்ஸ் ஓபன் டாக்

அப்படி ஒருவேளை வீரேந்திர சேவாக் சென்னை அணியின் கேப்டனாக மாறி இருந்தால் மகேந்திர சிங் தோனி வேறொரு அணிக்கு கேப்டனாக சென்றிருப்பார். இதனால் நல்ல வாய்ப்பாக தோனி சென்னை அணிக்கு கேப்டனாக இருக்கிறார் என சென்னை ரசிகர்கள் நிம்மதி அடைகின்றனர். ஒருவேளை ஷேவாக் சென்னை அணியின் கேப்டனாக மாறி இருந்தால் மகேந்திர சிங் தோனியை போன்று ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்து இருப்பாரா? தோனி அளவுக்கு ரசிகர்கள் சேவாக்கை கொண்டாடியிருப்பார்களா? என்றும் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles