தோனி 4 அல்லது 5 ஓவர்கள் களமிறங்க வேண்டும்.. அப்போதுதான் அவரால் இதை செய்ய முடியும்.. இர்ஃபான் பதான் பேச்சு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தற்போது ஒரு பேட்ஸ்மேனாக விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி கடைசியில் இறங்கி விளையாடி வருவது சென்னை அணிக்கு உதவாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சென்னையின் மகேந்திர சிங் டோனி கடைசியில் இறங்கி சிக்சர்களை அடித்து வருவது ஒருபுறம் சென்னை அணிக்கு நன்மையாக பட்டாலும் மறுமுனையில் தோனி இப்படி கடைசியில் இறங்கி விளையாடுவது அணிக்கு நன்மை பயக்காது என்று இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

- Advertisement -

மேலும் ஹர்பஜன் சிங் மகேந்திர சிங் தோனி இப்படி கடைசியில் இறங்கி விளையாடுவதற்கு விளையாடாமல் இருக்கலாம் என்று காட்டமான விமர்சனத்தை முன் வைத்திருந்தார். மேலும் அவர் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி கடைசியில் இறங்கி விளையாட இதுவே காரணம் என்று அணி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

- Advertisement -

ஹர்பஜன் சிங்கை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் மகேந்திர சிங் தோனி இப்படி கடைசியில் இறங்கி விளையாடுவது அது சென்னை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கலந்து கொண்ட போது தனது கருத்தை தெரிவித்தார். தோனி தனது கடைசி சீசனில் விளையாடி வரும் வேளையில் முன்னரே இறங்கி விளையாட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது
“மகேந்திர சிங் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் தோனி இன்னமும் முழு உடற்குதியுடன் இருக்கிறார். ஆனால் என்னை பொறுத்தவரை அவர் சென்னை அணியில் இன்னும் கூடுதல் பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாட வேண்டும் என்று நான் கூறுவேன். குறைந்தது அவர் நான்கு அல்லது ஐந்து ஓவர்கள் களமிறங்கி விளையாட வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் அவர் நிறைய சிக்சர்களை அடிக்க முடியும். அவர் தற்போது கடைசி இரண்டு ஓவர்களில் களமிறங்கி விளையாடுகிறார். ஆனால் இது நீண்ட காலத்திற்கு சென்னை அணிக்கு உதவாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்று நான் நம்புகிறேன்.

இதையும் படிங்க:அந்த வீரர் அப்படி என்ன ஸ்பெஷல்.? தோனி, கோலியை கூட சந்திக்க மாட்டார்.. சந்தித்து நலம் விசாரித்த காவியா மாறன்.. ட்ரெண்டாகி வரும் வீடியோ

எனவே இனிவரும் போட்டிகள் அனைத்துமே முக்கியமான போட்டிகள் என்பதால் மகேந்திர சிங் தோனி முன்னரே இறங்கி களமிறங்க வேண்டும். தயவுசெய்து சர்துல் தாகூரை எல்லாம் களமிறக்காமல் நீங்கள் முன்னரே களமிறங்கி விளையாடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles