2007 டி20 உலக கோப்பைல தோனி இதைத்தான் பண்ணாரு.. அதேபோல இப்போது ரோகித் ஷர்மா செய்வாரா.? கேள்வி கேட்கும் ஹர்பஜன் சிங்

2024 டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற உள்ளது. இதற்காக 15 பேர் கொண்ட வீரர்களை அனைத்து அணிகளும் அறிவித்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக இந்திய அணியும் தனது அணியை அறிவித்தது.

- Advertisement -

இதில் ரோகித் சர்மா கேப்டன் ஆகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். டி20 உலக கோப்பையை பொறுத்த வரை 2007ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் ஒருமுறை வென்றது. தோனிக்குப் பிறகு விராட் கோலி தலைமையில் டி20 உலக கோப்பையை வெல்லவில்லை. அதற்குப் பிறகு ரோகித் சர்மா தலைமையில் 2022ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்று இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.

- Advertisement -

அதற்குப் பிறகு 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இப்படி வரிசையாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றால் பார்ப்போம் என்ற நிலைமைக்கு ரசிகர்கள் தற்போது வந்து விட்டனர்.

- Advertisement -

அந்த அளவுக்கு இந்திய அணியின் மீது ரசிகர்கள் அதிருப்தி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற மகேந்திர சிங் தோனியும் சீனியர் வீரர்களின் பேச்சைக் கேட்டு அதற்கு தகுந்தவாறு தனது முடிவுகளை எடுத்தார். அதேபோல தற்போது ரோஹித் சர்மாவும் அணி வீரர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் முழுமையாக கூறும் பொழுது
“நான் கூறப்போகும் விஷயம் பலருக்கு தெரியாது. மகேந்திர சிங் தோனி அப்போது புதிய கேப்டனாக இருந்ததால் சீனியர் வீரர்களது ஆதரவு தேவைப்பட்டது. குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக தோனி சீனியர் வீரர்களோடு சேர்ந்து திட்டங்களை வகுப்பார்.

- Advertisement -

எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பதினெட்டாவது ஓவரை நான் வீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுப்பேன். அது எங்களை போட்டியிலிருந்து காப்பாற்றியது இப்போது போல ஒரு ஓவருக்கு 25 ரன்கள் எல்லாம் அப்போது அடிக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு அணியாக சேர்ந்து செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம். உண்மையில் தோனி ஆலோசனை கேட்பதில் மகத்தானவர்.

இதையும் படிங்க:ஆர்சிபி இப்பவாச்சும் திருந்தி இருக்கும்னு நினைக்கிறேன்.. நம்ம பிளேயர்ஸ்யும் கொஞ்சம் பாருங்க பாஸ்.. தவறை சுட்டிக்காட்டும் முகமது கைஃப்

அவர் தகுந்த ஆலோசனைகளை கேட்டு அதற்கு தகுந்தவாறு முடிவுகளை எடுப்பார். இப்போது என் கேள்வி என்னவெனில் ரோகித் சர்மாவும் இதே போல சாதிப்பாரா? என்பது தான் அவரால் மட்டும் அணியை வெற்றி பெற வைக்க முடியாது. வெற்றி என்பது நாம் என்ற எண்ணத்தில் மட்டுமே இருக்கிறது. எனவே சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அணி நலனுக்காக உழைக்க வேண்டும். சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படும் போது தான் பிரச்சினை பெரிதாகும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles