மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் வெற்றி வாய்ப்பு யாருக்கு.? மழையை நம்பிதான் சிஎஸ்கே உள்ளதா.? முழு விபரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான முக்கியமான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வருகிற 18-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்த போட்டி நடைபெறுமா? என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

பெங்களூருவில் வருகிற 18-ஆம் தேதி இரவு 8 மணி முதல் 11 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இப்போட்டி நடைபெறாமல் போகவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் அப்படி மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் யாருக்கு லாபம் என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றியும், ஆறு போட்டிகளில் தோல்வியும் தழுவி தற்போது 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதுவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பொருத்தவரை 13 போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது.

- Advertisement -

வருகிற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் அணியை வீழ்த்தினால் எளிதாக 16 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்குள் முன்னேறிவிடும். மாறாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஓவர்களில் அல்லது அதற்கு முன்னரே வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூர் அணி முன்னேறும். ஆனால் இந்த இரண்டும் நடைபெற மழையால் ஆட்டம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

ரன் ரேட் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது +0.528 என்ற அடிப்படையில் மூன்றாவது இடத்திலும், பெங்களூர் அணி +.0.387 என்ற அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது. அப்படி ஒரு வேலை ஆட்டம் பாதிக்கப்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இல்லையெனில் மழையால் ஆட்டம் பாதியாக குறைக்கப்பட்டால் வெற்றி வாய்ப்பு பெங்களூர் அணிக்கும் இருக்கும்.

- Advertisement -

மேலும் பெங்களூர் மைதானம் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இப்போட்டியில் டாஸ் என்பது முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருத்ராஜ் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இதுவரை டாஸ் வென்று இருக்கிறார். இதனால் இதுவும் தற்போது பெங்களூர் அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:எனது ஓய்விற்குப் பிறகு என்னை யாரும் பார்க்க முடியாது.. இந்த ஒரு விஷயம் தான் என்னை இன்னும் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.. விராட் கோலி ஸ்பெஷல் பேட்டி

மேலும் தற்போது அணிகளின் நிலைமையை பொருத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட பெங்களூர் அணி தற்போது வலுவாக காணப்படுகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் வில் ஜாக்ஸ் விலகினாலும் ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல்லை வைத்து சமாளித்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டி ரசிகர்கள் இடையே பரபரப்பு பஞ்சம் இருக்காது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles