எனது ஓய்விற்குப் பிறகு என்னை யாரும் பார்க்க முடியாது.. இந்த ஒரு விஷயம் தான் என்னை இன்னும் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.. விராட் கோலி ஸ்பெஷல் பேட்டி

தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் விராட் கோலி ஓய்வுக்கு பிறகு தன்னை யாரும் பார்க்க முடியாது என்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்று மிகப் பெரிய உத்வேகத்துடன் தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இனிவரும் கடைசி போட்டி சென்னை அணியுடன் என்பதால் சென்னை அணியை வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்போடு களமிறங்குகிறது.

- Advertisement -

இந்த நிலையில் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இந்த சீசனில் மிகப்பெரிய ஃபார்மில் இருக்கிறார். இதுவரை விளையாடி ஒரு சதம், ஐந்து அரை சதங்கள் உட்பட 661 ரன்கள் குவித்து புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறார். தொடக்கத்தில் விராட் கோலியின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அதற்கும் தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.

- Advertisement -

தற்போதைய டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் வேளையில், விராட் கோலி மிகச் சிறந்த பார்மில் இருப்பது இந்திய ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஒருநாள் உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்றது போல் இந்த முறையும் டி20 உலக கோப்பையில் மிகச் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது விராட் கோலிக்கு 35 வயதாகி உள்ளதால் அவரது ஓய்வு குறித்த பேச்சுக்களும் தற்போது எழுந்துள்ளன. ஏற்கனவே ஒரு நாள் தொடரில் விளையாடுவதை குறைத்துக் கொண்ட விராட் கோலி வருகிற உலகக் கோப்பை உடன் டி20 தொடரிலும் விளையாட மாட்டார் என்று தெரிகிறது இதனால் வரும் காலங்களில் டெஸ்ட் தொடரில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்றும் பேச்சுக்கள் வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து விராட் கோலி அளித்துள்ள பிரத்யேக பேட்டியில்
“ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்ற பசியுடன் இருப்பதற்கான காரணம் மிகவும் எளியது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் ஓய்வு பெற்ற பிறகு நான் இவ்வாறு விளையாடி இருக்கலாம், வெற்றி பெற்றிருக்கலாம் என்று நான் ஒரு நாளும் நினைக்கக் கூடாது.

நான் பின்னோக்கி விளையாட விரும்புகிறேன். நான் ஓய்வு நிலையில் இருக்கும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைப்பேனோ அதை எல்லாம் தற்போது செய்து கொண்டிருக்கிறேன். ஒரு முறை நான் ஓய்வை அறிவித்துவிட்டு கிரிக்கெட் களத்தை விட்டு வெளியேறினால் அதற்குப் பிறகு என்னை யாரும் பார்க்க கூடாது.

இதையும் படிங்க:இந்தியாவே காத்திருப்பது போல நானும் காத்திருக்கிறேன்.. ருத்ராஜ் என்ன செய்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.. சிஎஸ்கே, ஆர்சிபி போட்டி குறித்து ராயுடு பேட்டி

அதனால் நான் விளையாடும் வரை நூறு சதவீதம் உழைப்பை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த ஆசைதான் என்னை தற்போது வரை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles