நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இருக்கிறது.
இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்துள்ளது. தோல்விக்கான முக்கிய காரணம் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கி இருக்கிறார். கௌஹாதியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
டி20 உலக கோப்பை காரணமாக சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற, அவருக்கு பதிலாக கோலார் கேட்மோர் அறிமுகமானார். வழக்கம் போல ஜெய்ஸ்வால் நான்கு ரன்களிலும், கேட் மோர் 18 ரன்களிலும் வெளியேறினார்கள். கேப்டன் சஞ்சு சாம்சன் 18 ரன்களில் ஆட்டம் இழக்க, ரியான் பராக் மட்டும் ஓரளவு சிறப்பாக விளையாடி 34 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார்.
இதனால் இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 144 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கத்தில் நான்கு விக்கெட்டுகள் விரைவிலேயே இழந்தாலும், அதற்கு பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாம் கரண் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்த அணியை காப்பாற்றியது. சிறப்பாக விளையாடிய சாம் கரண் 41 பந்துகளை எதிர் கொண்டு 5 பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என விளாசி 63 ரன்கள் குவித்தார்.
இதனால் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நான்காவது தோல்வியாக அமைந்திருக்கிறது இந்த தோல்விக்கு பின்னர் பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும்பொழுது
“இந்த ஆடுகளத்தில் நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன். இது 160 ரன்கள் வரை குவிக்க கூடிய ஆடுகளம். நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருந்தால் அந்த வெற்றி இலக்கை எட்டி இருப்போம்.
இங்குதான் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். இன்னும் ஒரு தரமான பந்துவீச்சாளர் இருந்தால் எங்களுக்கு சிறப்பாக இருக்கும். தற்போது ஐந்து பந்துவீச்சாளர்களுடன் நாங்கள் விளையாடி வருகிறோம். நாங்கள் தற்போது நான்கு ஆட்டங்களில் தோற்றுள்ளோம் என்பதை அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்கு நாம் கோட்டை விட்டோம் என்பதையும் அமைதியாக கண்டறிய வேண்டும். எங்கள் அணியில் யாராவது ஒருவர் முன்னேற வேண்டும். நாங்கள் எங்கள் குணத்தை காட்ட இதுவே சரியான நேரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
160 முதல் 170 வரை நல்ல ஸ்கோர் ஆக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தத் தொடரில் 200 ரன்களை எளிதாக பெறுவதற்கு இது போன்ற ஆடுகளங்களில் விளையாடி எங்களுக்கு பழக்கமில்லை. ஸ்மார்ட் கிரிக்கெட்டை விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப்ளை உருவாக்குவதே வெற்றிக்குச் சிறந்ததாகும். இனி எங்கள் வழியில் நாங்கள் முன்னேறுவோம் என்பதை நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

