நீங்க ரெண்டு பேரும் கேப்டனா இருந்தப்போ என்ன சாதிச்சு இருக்கீங்க.. ஹர்திக் பாண்டியாவை மட்டும் குறை சொல்றதுக்கு.. ஆதரவாக களமிறங்கும் கௌதம் கம்பீர்

இந்த ஐபிஎல் தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மோசமான தொடராக அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இது வரை விளையாடிய 13 போட்டிகளில் நான்கு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று 9 போட்டிகளில் தோல்வியை தழுவி முதல் அணியாக பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

இதற்கு ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சிதான் காரணம் என்று ஒரு தரப்பு கூறிவந்த நிலையில் கெவின் பீட்டர்சன் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை விமர்சித்தது குறித்து கௌதம் கம்பீர் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த சீசனில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஏனென்றால் ஏற்கனவே கேப்டனாக செயல்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து பட்டங்களை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது.

- Advertisement -

மாறாக குஜராத் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் வாங்கி மும்பை அணியின் கேப்டனாக நியமித்தது. இது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு தரப்பு கூறிவந்தது. மேலும் ஹர்டிக் பாண்டியாவுக்கும், ரோஹித் சர்மாவுக்குமே இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது என்று கருத்துக்கள் வெளிவந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி செயல்பாடுகளும் மோசமாக அமைந்தது.

இந்த நிலையில் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் காட்டமான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது கௌதம் கம்பீர் பாண்டியாவுக்கு ஆதரவாக களமிறங்கி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது
“கெவின் பீட்டர்சன் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் கேப்டனாக இருந்தபோது என்ன சாதித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இவர்களின் கேப்டன்சி ரெக்கார்டுகளை எடுத்துப் பார்க்கும்போது மற்ற கேப்டன்களை விடவும் மோசமாக இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரில் பீட்டர்சன் கேப்டனாக இருந்ததில்லை.

இதையும் படிங்க:ரசிகர்களால் ஜடேஜா மிகவும் வருத்தம் அடைந்தார்.. காரணம் இதுதான்.. விளக்குகிறார் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு

இவர் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே சாதித்ததை தவிர வேறு எதையும் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா ஒரு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தது மட்டுமில்லாமல் இன்னொரு முறை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்திருக்கிறார். எனவே ஆரஞ்சு பழத்தை ஆரஞ்சு பழத்துடன் தான் ஒப்பிட வேண்டும் அதை ஆப்பிள் பழத்துடன் ஒப்பிட கூடாது” என்று கெளதம் கம்பீர் பேசி இருக்கிறார். கௌதம் கம்பீர் கொல்கத்தா அணிக்காக இரண்டு முறை ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தற்போது ஆலோசகராக இருந்து வரும் கொல்கத்தா அணியையும் நம்பர் ஒன் இடத்திற்கு உயர்த்தி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles