இதெல்லாம் நடக்கும்னு முன்னாடியே தெரியும்.. 5 முறை சாம்பியன்னா சும்மாவா.. பக்காவா பிளான் போட்ட சிஎஸ்கே.. பீதியில் ராஜஸ்தான், ஆர்சிபி

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் ஆறு வெற்றிகள் மற்றும் ஏழு தோல்விகளுடன் தற்போது புள்ளி பட்டியல் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தனது கடைசி லீக் போட்டியான பெங்களூரு அணியுடன் வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் அணிகளில் இருந்து விலகி தாயகம் திரும்பினர். இது குறிப்பாக ராஜஸ்தான், பெங்களூரு அணிகளுக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனென்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிக் கொண்டிருந்த ஜாஸ் பட்லர் தற்போதைய இங்கிலாந்து டி20 உலக கோப்பையின் கேப்டன் ஆவார். டி20 உலக கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. ராஜ்ஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்துவரும் ஜாஸ் பட்லருக்கு மாற்று வீரரை கண்டுபிடித்ததாக தெரியவில்லை.

- Advertisement -

ஏற்கனவே இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள ராஜஸ்தான் அணி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க அடுத்த போட்டிகளில் வெற்றி பெறுவது மிகவும் அவசியமாகும். இந்த சூழ்நிலையில் ஜாஸ் பட்லரின் வெளியேற்றம் அந்த அணிக்கு பெரிய அடியாக அமைந்துள்ளது. அதற்கு அடுத்த லிஸ்டில் இருப்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

சீசனின் தொடக்கத்தில் மேக்ஸ்வெல் தொடர்ந்து சுமாரான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வந்ததால் அவருக்கு பதிலாக வில் ஜாக்ஸை களம் இறக்கியது ஆர்சிபி நிர்வாகம். இவர் களம் இறங்கியதற்கு பிறகுதான் ஆர்சிபி அணிக்கு வெற்றிகள் வர ஆரம்பித்தது என்று கூட சொல்லலாம். குஜராத் அணிக்கு எதிராக இவர் அடித்த 41 பந்துகளில் 100 ரன்கள் ஆர்சிபி வீரர்களை உற்சாகமூட்டியது. அதுவே அவர்கள் தோல்வியிலிருந்து மீண்டு வர ஒரு சிறந்த பாதையாகவும் அமைந்தது.

- Advertisement -

ஆர்சிபி அணி தற்போது 6 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் தனது அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் வில் ஜாக்ஸின் இழப்பு பெங்களூர் அணிக்கு பெரிய பிரச்சினையாக அமைந்துள்ளது. ஆனால் இது போன்று முன்னரே நடைபெறும் என்பதை சிஎஸ்கே நிர்வாகம் தெளிவாக உணர்ந்து இருக்கிறது.

இதையும் படிங்க:சிவம் துபேவை எதுக்கு எடுத்தீங்க.. புள்ளி விவரம் தெரியாம டி20 உலக கோப்பைக்கு எடுத்து தப்பு பண்ணிட்டாங்க.. கதறும் ஆர்சிபி ரசிகர்கள்

அதனால்தான் இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு பெரிதாக வாய்ப்புகளை வழங்காமல் ஆட்டத்தின் இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டும் களம் இறக்கியது. தற்போது அவர் சிஎஸ்கேவை விட்டு விலகினாலும் அவருக்கு பதிலாக தீக்ஷானா மற்றும் சான்ட்னர் ஆகியோர் இருப்பதால் அவர்களை வைத்து சிஎஸ்கே நிர்வாகம் சமாளித்துக் கொள்ளும். இதனால் அவரது விலகல் அணிக்கு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால்தான் மற்ற அணிகளை காட்டிலும் சிஎஸ்கே அணி ஏன் சாம்பியனாக உள்ளது என்பதற்கு இந்த ஒரு சான்று உதாரணம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles