சிவம் துபேவை எதுக்கு எடுத்தீங்க.. புள்ளி விவரம் தெரியாம டி20 உலக கோப்பைக்கு எடுத்து தப்பு பண்ணிட்டாங்க.. கதறும் ஆர்சிபி ரசிகர்கள்

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்தவுடன் அடுத்ததாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சிவம் துபே உலக கோப்பைக்கு தேர்வு செய்தது தவறு என்று ஆர்சிபி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிடில் வரிசையில் களமிறங்கி சுழற் பந்து வீச்சை தாக்குதல் வேட்டை நடத்தி வரும் சிவம் துபே எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு தற்போது சிம்ம சொப்பனமாக விளங்கிக் கொண்டிருக்கிறார். சிவம் துபே குறிப்பாக ஏழாவது ஒவ்வொரு முதல் 15 வது ஓவர் வரை சுழற் பந்துவீச்சாளர்களே அதிகமாக வீசுவார்கள் என்பதால் அந்த இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தார்.

- Advertisement -

இவரது திறமையை கண்ட இந்திய தேர்வுக்குழு வாரியம் டி20 உலக கோப்பை மிடில் வரிசையில் களம் இறங்க சரியான ஆளாக இருப்பார் என்று நினைத்து தேர்வு செய்தது. ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இவர் பெரிதாக சோபிக்கவில்லை. மாறாக தற்போது ஆர்சிபி அணிக்கு விளையாடிக் கொண்டிருக்கும் ராஜாத் பட்டிதார் சுழற் பந்துவீச்சை திறம்பட சமாளித்து வருகிறார். சுழற் பந்துவீச்சுக்கு எதிராக அவரது ஸ்ட்ரைக் ரேட் சிவம் துபே வின் ஸ்ட்ரைக் ரேட் விட அபாரமாக உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் சிவம் துபேவை விட பட்டிதாரைதான் டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்திருக்க வேண்டும் எனவும், அப்படி தேர்வு செய்து இருந்தால் டி20 உலக கோப்பையில் நன்றாக தனது பங்களிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்றும் பெங்களூர் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதாவது 2024ஆம் ஆண்டு சிவம் துபே ஐபிஎல் தொடரில் பத்து போட்டிகளில் விளையாடி சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் 50 பந்துகளை சந்தித்து 83 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நான்கு முறை சுழற் பந்துவீச்சாளர்களிடமே தனது விக்கட்டையும் பறி கொடுத்து இருக்கிறார். தூபேவின் பேட்டிங் சராசரி 20.8. மேலும் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 166. அவர் வலிமையாக விளங்கும் சுழற் பந்துவீச்சில் 42 சதவீதம் டாட் பந்துகளை விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

இதற்கு அப்படியே எதிர்புறத்தில் தற்போது பெங்களூர் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் ரஜத் பட்டிதார் 81 சுழற் பந்துகளை சந்தித்து 182 ரன்கள் குவித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 91 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 225 ஆகும். மேலும் இதில் 22 சதவீதம் டாட் பால்கள் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

இதையும் படிங்க:டி20 உலக கோப்பையில் பும்ராவின் ஆட்டம் வேற லெவலில் இருக்கும்.. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுக்கும் அவர் அச்சுறுத்தலாக இருப்பார்.. விளக்குகிறார் டேவிட் மில்லர்

சூழ்நிலை இவ்வாறு இருப்பின் டி20 உலக கோப்பையில் இவருக்கு மாறாக சிவம் தூபேவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக உண்மையில் ராஜத் பட்டிதார்தான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருக்குத்தான் உண்மையில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பெங்களூர் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles