டி20 உலக கோப்பையில் பும்ராவின் ஆட்டம் வேற லெவலில் இருக்கும்.. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுக்கும் அவர் அச்சுறுத்தலாக இருப்பார்.. விளக்குகிறார் டேவிட் மில்லர்

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்தவுடன் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது.

- Advertisement -

இதற்காக அனைத்து அணிகளும் மிக தீவிரமாக தற்போது தயாராகி வரும் நிலையில் இந்திய அணியும் ஐபிஎல் முடிந்தவுடன் உலக கோப்பைக்கு தயாராகும் பணியில் ஈடுபட உள்ளது. இதற்கான இந்திய அணியை முன்னரே அறிவித்த இந்திய தேர்வுக்குழு வாரியம் வீரர்கள் தேர்வு குறித்து சில சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதற்கான விளக்கமும் பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்தது.

- Advertisement -

பேட்டிங்கில் மிக வலுவாக தெரியும் இந்திய அணி பந்துவீச்சில் மட்டும் சற்று பலவீனமடைவது போல் இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர் வரிசையை பொருத்தவரையில் பும்ரா மட்டுமே தற்போது நம்பிக்கை அளிக்கக்கூடிய வேக பந்துவீச்சாளராக இருக்கிறார். முகமது சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் ஐபிஎல் தொடரில் மிக சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

இதனால் அவர்கள் மீது இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை. மேலும் தற்போது சன்ரைசர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிகொண்டிருக்கும் நடராஜனை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற டி20 உலக கோப்பையில் பும்ரா அச்சுறுத்தலான பந்துவீச்சாளராக இருப்பார் என்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் டேவிட் மில்லர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது மிகச்சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் ஒரு பேட்ஸ்மேன் ஆக இருப்பதால் பும்ரா இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர் இன்று மட்டும் இல்லாமல் பல வருடங்களாக உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -

உலகின் எந்த பேட்ஸ்மேனையும் அவரால் அச்சுறுத்த முடியும். மேலும் வர இருக்கிற டி20 உலக கோப்பையில் பும்ரா எனக்கு மட்டும் இல்லாமல் அனைத்து பேட்ஸ்மன்களுக்கும் மிகப் பெரிய திருத்தலாக இருப்பார் என்று தோன்றுகிறது” என கூறியிருக்கிறார். தற்போது டேவிட் மில்லரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:ஆர்சிபி கோலியை கேப்டனாக நியமிக்க இதுதான் சரியான நேரம்.. இந்த பழக்கம் கோலி கொண்டு வந்ததுதான்.. காரணத்தை விளக்கும் ஹர்பஜன்சிங்

தற்போது ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை எட்டி வருவதால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளை தவிர மற்ற அணியின் இந்திய வீரர்கள் முன்னரே உலகக் கோப்பை தயாராக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி விட்டதால் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா சூரியகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகிய முன்னணி வீரர்கள் முன்னரே உலகக் கோப்பை க்கு தயாராவது இந்திய அணிக்கு ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles